பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17? வேண்டாமல் தானே வரும் என்று நான்காம் பாடல் தெளிவுபடுத்துகின்றது. உலகோர்தானே வந்து ஒத்துழைப் பார்கள் என்பது குறிப்பாகும். தானே முடிவு எய்தும்" என்று குறட்பா கூறுகின்றது. உலகமே அவனை ச் சுற்றிக் கொண்டிருக்கும் என்று ஐந்தாம் பாடல் எடுத்துரைக்கின்றது. சுற்றமாச் சுற்றும் உலகு என்று குறட்பா கூறி அவனுடைய பெருமையினைக் கூறுகின்றது. அவன் பிறர் குற்றம் கூறும்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை, குற்றம் இலனாய்' என்று தொடங்கும் இக் குறட்பா வலியுறுத்துகிறது. குடி மக்களுக்குத் தொண்டாற்றுவதே ஆண்மைக்கு அடையாளமாகும் என்று ஆறாம் குறட்பா விளக்குகின்றது. குடி மக்களுக்குச் செய்வதைத் தனக்குச் சொந்தமான செயலாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்காக, *இல்லாண்மை ஆக்கிக் கொளல் என்று கூறினார். குடி மக்களுக்குத் தொண்டாற்றும் அரிய பண்புகள் பலரிடமும் காணமுடியாது. சிலரிடமே தலைமைப் பண்பு காணப்படும். இதனை ஏழாம் பாடல் கூறுகிறது. “ஆற்றுவார் மேற்றே பொறை' என்று குறிப்பிட்டு இக் கருத்து விளக்கம் செய்யப்படுகிறது. குடிமக்களுக்காகப் பாடுபடுபவனுக்கு நேரம் காலம் என்பது இல்லையென்று கூறப்பட்டது. பருவத்தினை அவன் பார்த்துக் கொண் டிருக்கத் தேவையில்லை. மக்களுக்குப் பாடுபடுபவன் எந்த நேரமும் தொண்டு செய்து கொண்டே இருப்பான். 'இல்லை பருவம்' என்று எட்டாம் குறட்பா குறித்துக் காட்டி உண்மையினைப் புலப்படுத்துகிறது. காலமறிதல்' என்ற அதிகாரத்தில், வேண்டும் பொழுது' என்பதனைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். குடிமக்களுக்குத் தொண் டாற்றுபவனுக்குத் துன்பங்கள் நிறைய வரும். எப்போதும் துன்பத்திலேயே இருக்க நேரிட்டாலும் நேரிடும் என்ற