பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 கருத்தினை ஒன்பதாம் பாடல் நயமாக எடுத்துரைக் கின்றது; சிந்தனைக்குரியதாகும். நல்ல ஆள் இருந்து தாங்கி ஆவன செய்யா விட்டால் குடி வீழ்ந்து விடும் என்று கூறுகின்றார். நல்லாள் இல்லாத குடி என்று முடிகின்ற பத்தாம் குறட்பா இக் கருத்தினைக் கூறுகின்றது. குடிமக்களுக்கு வாழ்கின்றவன் சிறப்பும் கடமையும் உணர்த்தப்பட்டன. 'செயல் வகை" என்று, தெரிந்து செயல் வகை, வினை செயல் வகை, பொருள் செயல் வகை முதலிய அதிகாரங்களும் முடிகின்றன. 104. உழவு சிறுபான்மை வாணிபம் செய்பவர்களுக்கும் பெரும் பான்மை வேளாண்மைத் தொழில் செய்பவர்களுக்கும் உரியதாகும். தொழில் செய்யும் அனைவர்க்குமே உரித்தான தாகக் கொள்ளுதல் வேண்டும். உழவினது சிறப்பினை முதற்குறட்பா கூறுகின்றது. இரண்டு முதல் ஆறாவது குறட்பா வரை உழவுத் தொழில் செய்வாரது சிறப்புக் கூறப் பட்டது. ஏழு முதல் ஒன்பதாம் பாடல் வரை உழவுத் தொழில் செய்யும் முறைகள் கூறப்பட்டன. பத்தாம் குறட்பா உழவுத் தொழில் செய்யாமையின் குற்றத்தினைக் கூறுகின்றது. "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், உழந்தும் உழவே தலை’ என்றும் கூறப்பட்டதால், தலையான தொழில் உழவேயாகும் என்று முதற் குறட்பா தெளிவு படுத்துகிறது. பிற தொழில்களால் பொருள் எய்திய வழியும் உணவுக்காக உழவுத் தொழிலுக்கே செல்ல வேண்டி யிருப்பதால் அவ்வாறு சிறப்பிக்கப்பட்டது. . . . " இரண்டாம் குறட்பா, உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்று கூறுகிறது. உலகத்தாரை நிலைத்து நிற்க வைப்பதால்