பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சோர்வு தரும் என்று நான்காம் பாடல் முடிந்து உணர்த்து கிறது. "யல் குரைத் துன்பங்கள் சென்றுபடும்" என்று கூறும் ஐந்தாம் குறட்பா, நல்குரவின் கொடிய தன்மையினைக் கூறுகின்றது. வறுமையுற்றவர்கள் நற்பொருள்களை எடுத் துரைத்தாலும் பிறர் கேட்க மாட்டார்கள். கேட்டால் பின்னர் பணத்திற்கு வருவாரோ என்று அஞ்சி கேட்க மாட்டார்களாம். இதனை ஆறாம் குறட்பா குறிப்பாக உணர்த்துகிறது. ஈன்றதாயும், அந்நியனைப் பார்ப்பது போல் பார்க்க வும் நினைக்கவும் செய்று விடுவது இந்த நல்குரவென்று ஏழாம் பாடல் எடுத்துரைக்கின்றது. நெருப்பின் மேல் தூங்குவதும் முடியும் - இந்த நல்குரவு வந்துவிட்டால் கண்ணுறக்கம் இல்லையென்று ஒன்பதாம் குறட்பா அறிவுறுத்துகிறது. . நுகரப்படும் பொருள்கள் யாவுமே இல்லாதவர்கள் "முற்றத் துறத்தலே நல்லது என்று குறிப்பிட்டுக் காட்டு கிறது பத்தாம் குறட்பா. ஒருவழியில் இவரிகளும் துறந்தாராயினராக ஆதல் வேண்டும் என்பதாகும். 106. இரவு இரவு, என்பது யாசித்தல் என்பதாகும். உலகு வழக்கில் ‘பிச்சை எடுத்தல்" என்று கூறப்படுவதாகும். நுகரப்படுவன யாவுமே இல்லாதார் இரவினையாசித்தலை-மேற்கொள்ளு வார்கள் என்பதாம். வறுை மயாளர்கள், இரத்தற்குப் பொருத்தமானவர்களிடம் சென்றுதான் இரத்தல் வேண்டும். அவர் இல்லையென்று மறைத்தாராயின், அது அவர் பழியே யல்லாமல் இரப்பவர்களின் பழியாகாது. இதனை முதற் குறட்ப எடுத்துரைக்கின்றது. -