பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஏனெனில் அவன் இந்த நிலைமைக்குவந்ததற்கே முதற்காரணம் கோபம்தான் என்று அறிவுறுத்துகிறது. "இரவு' என்ற இவ் அதிகாரத்தில், யாசித்தல், என்பதை அதிகம் வலியுறுத்தாமல், யாசிப்பவர்களுக்கு மறைக்காமல் கொடுத்தல் வேண்டும் என்பதே அனேகமாக குறட்பாக்கள் அனைத்திலும் கூறப்பட்டதாகும். மறைத்தால் பெரும்பழி என்பதனைக் குறட்பாக்கள் மிகுதியும் வலியுறுத்துகின்றன. 107. இரவு அச்சம் மானத்தினை அழிக்கும் இரவுக்கு-யாகிக்கும் பழக்கத் திற்கு - அஞ்சவேண்டும் என்பதனைக் கூறுவதாகும். "தீவினை அச்சம்' என்பது போல இரவு அச்சம் அமைக்கப் பட்டுள்ளதாகும். முதலிரண்டு பாடல்களாலும், இரத்தலின் கொடுமை கூறப்பட்டதாகும். மூன்றாம் பாடல் வறுமை தீர்வதற்கு வழி இரவன்று என்று குறித்துக்காட்டுகிறது. நான்கு, ஐந்து, ஆறு பாடல்கள் முயற்சி செய்து ஈட்ட வேண்டுமேயல்லாது யாகித்தல் கூடாதென்று கூறுகின்றன. ஏழாம் குறட்பாவினால், மானத்தினை அழிக்கவரும், இரவு. யாசித்தல் கூடாதென்று கூறப்பட்டது. எட்டு, ஒன்பது, பத்து ஆகிய மூன்று பாடல்களால், இரவின் (யாசிப்பதின்) குற்றமும், யாசிப்பவர்க்குக் கொடுக்காமல் மறைப்பதின் குற்றமும் ஒருங்கு சேர விளக்கமாகக் கூறப்பட்டன. "இரவாமை கோடியுறும்" என்று முதற் குறட்பா எடுத்துக்காட்டி கொடுக்க மறைக்காதவர்களிடமும் யாசிக் காமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இந்த உலகத்தினைப் படைத்தவனான ஒருவன், யாசித் துத்தான் உயிர் வாழவேண்டும் என்று விதித்திருப்பானானால் அவன் அழியக்கடவன் என்று இரண்டாம் குறட்பா கூறுகின்றது. வகுத்தான் வகுத்த என்ற குறட்பாவும் சிந்தனைக்குரிய தாகும். முதல் அதிகாரத்தில் கூறப்படும் இறைவனுக்கும்