பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 இக்குறட்பா குறித்துக் காட்டுவதற்கும் யாதொரு ஒற்றுமை யும் இல்லையென்பதனை அறிதல் வேண்டும். இரந்து தீர்வாம்' என்று மூன்றாம் குறட்பா எடுத்துக் காட்டி வறுமையினை யாசித்துத் தீர்வது பெருங்குற்றம் என்று உணர்த்துகிறது. எப்படிப்பட்ட வறுமையுண்டான போதும் இரத்தல் இல்லாதிருப்பது சான்றாண்மையாகும் என்று நான்காம் பாடல் கூறும். கூழாக இருந்தாலும் முயற்சியினால் உண்ணுவதே பெருஞ்சிறப்பாகும் என்று ஐந்தாம் குறட்பா சொல்லுகிறது. தாள் தந்தது' என்று குறிப்பிட்டுக் காட்டுவது சிறப்புடையதாகும். ஆவிற்குக் கூட யாசிக்காதே என்று ஆறாம் பாடல் கூறுகின்றது. மறைப்பவர்களிடம் யாசிக்காதே என்று வற்புறுத்திக் கூறுகிறது ஏழாம் குறட்பா. ரமாப்பு இல் தோணி என்று பாதுகாப்பில்லாத தோணிக்கு இரவு' என்பதை ஒப்பிட்டுக் காட்டுவது எட்டாம் குறட்பாவாகும். இரவு கரவு இந்த இரண்டினையும் நன்கு ஒன்பதாம் குறட்பா விளக்கிக் காட்டுகிறது. இரப்பவர்-கரப்பவர் (மறைப்பவர்) ஆகிய இருவரையும் பத்தாம் பாடல் கூறி, கரப்பவரின் கொடும் தன்மையினை எடுத்துக்காட்டி விடுகிறது. 108. கயமை மக்களுக்கு இருக்கவேண்டிய தன்மைகள் எதுவுமே இல்லாத கீழோரது இயல்பினைக் கூறுதலாகும். கயவர் என்பது கீழ்மக்களைக் குறிப்பதாகும் முதற்குறட்பா கயவரது குற்றம் மிகுதியினைக் கூறுகிறது. இரண்டாம் குறட்பா பழி முதலியவற்றிற்கு அவர்கள் அஞ்ா மாட்டார்கள் என்பதனைக் கூறுகிறது. --- - - - மூன்றாம் குறட்பச கயவர்கள் விலக்குவது என்று இல்லாமல் வேண்டியனவெல்லாம் செய்வர் என்று குறித்துக்