பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெண்ணின் கண்கள் உயிரை உண்ணும் கூற்றுவனாகவே இருந்தன என்று அவன் கூறுவதை சொல்லுகிறது. இப் பெண்ணின் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்துடன் இருந்தன என்று அவன் கூறுவதை நான்காம் பாடல் உணர்த்துகிறது. ஐந்தாம் பாடலும் அ வ ளு ைட ய பார்வையின் தன்மையினை மேலும் பற்பலவாக எடுத்துக்காட்டுகிறது. புருவங்கள் கண்களை மறைக்கவில்லையே என்று அவன் கூறுவதை ஆறாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அவள் உறுப்பின் தன்மையினை ஏழாம்பாடல் கூறுவதா கும். அவளுடைய நெற்றியின்- நுதலின் - அருமை எட்டாம் பாடலில் காணப்படுகிறது. ஒன்பதாம் பாடல் அவள் அணிகலன்கள் எதற்கு என்று கேட்கின்றது. பத்தாம் பாடல், கண்டாலே களிப்பினை ஊட்டும் காமத்தின் சிறப்பினை விளக்கம் செய்கிறது. அணங்கு, மயில், கணங்குழை, தானை, கூற்று, பிணை, புருவம், களிறு, மாதர், நுதல், அணி, நறா என்பவைகள் எல்லாம் பெண்ணின் அழகினைக் குறிப்பதோடு ஆடவனை எவ்வாறு வருத்துகின்றன என்பதையும் குறித்துக் காட்டு கின்றன. உறுத்தல் என்று இவ்வதிகாரம் முடிவது போன்று அறன்வலி உறுத்தல், அலரறிவுறுத்தல், குறிப்பறிவுறுத்தல் முதலிய அதிகாரங்களும் முடிகின்றன. அவனுடைய நிலைமையினை, மாலும் என் நெஞ்சுஅன்னது உடைத்து - இனி அறிந்தேன் அணி எவனோ ஏதில தந்து - என்று குறிப்பிட்டவைகள் எல்லாம் விளக்கு கின்றன. ஆடவனின் மனம் அழகினால் வருத்தமுற்றது என்பதனைப் பத்துப்பாடல்களும் தெளிவாகக் கூறுகின்றன.