பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பிறகு அவர்கள் பேசுகின்ற சொற்களில் அர்த்தமில்லை யென்றுபத்தாம் பாடல் எடுத்துரைக்கிறது. இரு நோக்கு - ஒரு நோக்கு சிறுநோக்கம் - நோக்கி னாள் நோக்கி . நிலன் நோக்கும் . தான் நோக்கி குறிக் கொண்டு . செறார் சொல் . சிறு சொல் . யான் நோக்க . இணை நோக்கு - வாய்ச் சொற்கள் என்று காணப் படுகின்றன வெல்லாம் காதலர்களின் நோக்குகளைப் பற்பல வாகக் கூறி அவர்களின் சொற்கள் எத்தன்மையன என்ப தனையும் கூறுகின்றன. t தகைஅணங்கு உறுத்தல் முதலாக வரும் ஏழு அதிகாரங் களும்'களவியல்’ என்று கூறப்படும்காதல் வாழ்க்கையினைக் கூறுவதாகும். அதற்கேற்ப, இரண்டாம் குறட்பாவில் களவு' என்று கூறப்படுவதும் சிந்தனைக் குரியதாகும். பொருட் பாலில் குறிப்பறிதல் என்ற தலைப்புடன் அதிகாரமொன்று காணப்படுகின்றது. 11 1. புணர்ச்சி மகிழ்தல் குறிப்பறிந்து இன்பம் நுகர்ந்த தலைமகன் மகிழ்ந்து சொல்லுவனவற்றைக் கூறுதலாகும். முதற்குறட்பா இன்பம் நுகர்ந்தவன் எடுத்துக் கூறியதை விளக்கம் செய்கின்றது. 'ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்று குறட்பா முடிந்து உண்மையினை உணர்த்துகின்றது. பிரிந்திருந்த போது தலைமகள் சொல்லுவதை இரண்டாம் குறட்பா தெரிவிக்கின்றது. தன் நோய்க்குத் தானே மருந்து, என்று நயம்படக் கூறுகின்றதாகும். அளவு கடந்த இன்பத்தின் நிலையினைக் கூறும் முறையினை மூன்றாம் பாடல்தெளிவாக்குகிறது. "இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு என்று அவன் கூறி தனது உள்ளத்தினைப் புலப்படுத்துகின்றான்