பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கூறுவதை எடுத்துக் காட்டுகிறது. நின்னினும் மென்னிரள் யாம் வீழ்பவள் என்று அவனுடைய சொற்கள் அமைந் துள்ளன. தலைவியைப் பிரிந்திருந்தபோது மலர்களைப் பார்த்து, தலைவன், தனது நெஞ்சம் மயங்குவதைக் கூறுகின்றான். இதனை மலர்காணின் மையாத்தி நெஞ்சே என்று இரண்டாம் பா ட ல் குறித்துக் காண்பிக்கின்றது. தலைமகளது இயல்பினை மூன்றாம் பாடல் குறிப்பதாகும். உறுப்புக்களுக்கு அருமையான உவமைகள் சொல்லப்படு கின்றன. இன்பம் நுகர்தல் இல்லாமல் இருந்த நேரத்தில் குவளை மலர்களை இழித்துப் பேசிய கருத்தினை நான்காம் பாடல் விளக்குகிறது. கவிழ்ந்து நிலம் நோக்கு" என்று அவன் குறிப்பிடுவது சிந்தனைக் குரியதாகும். நலம் புனைந்துரைத்தல் என்று கூறப்படுகின்ற கற்பனை மிகவும் கிறப்பாக ஐந்தாம் பாடலில் அமைந்துள்ளது. அவளுடைய நுசுப்பு (இடை) முரிந்துவிடும் என்று கூறு கின்றான். நுசுப்பிற்கு நல்ல படா பறை" என்று அமைக்கப் பட்ட கருத்து. புனைந்துரைத்தலை மிகுதியாக்குகின்றது. இரவுக் குறிக் கண் மதியினைக் கண்ட தலைவன் கூறுவதை, ஆறாம் பாடல் எடுத்துரைக்கின்றது.

  • கலம்கியtன் என்று குறித்துக்காட்டி விண்மீன்கள் கலக்கமாகத் தோன்றுவதற்குக் காரணம் கூறப்பட்டது. அக் கருத்தினைத் தொடர்ந்து, ஏழாம் பாடல் விளக்கம் தருகிறது. குறைந்த இடம் பின்பு நிறையும் தன்மை மதியிடம் உண்டு. அத்தக் குறை காதலியிடம் இல்லையென் கின்றான்.

எட்டாம் பாடல் காதலியின் முகம் போல் ஒளிவிடும் ஆற்றல் மதிக்கு இல்லையென்று அவன் கூறுவதை எடுத்துக் காட்டுகிறது. மேலும், மதியினைப் புார்த்து அக்காதலன்