பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 அவனுடைய காமம் அலரினால் வெளிப்படும் போதெல் லாம் அவனுக்கும் இன்பமாக இருக்கின்றதென்ற கருத்து ஐந்தாம் பாடலால் தெரிவிக்கப்படுகிறது. வெளிப்படும் தோறும் இனிது என்று குறட்பா விளக்கம் செய்கிறது. திங்களை பாம்பு கொண்டது போல, அலர், ஊராரெல்லாம் விரைவாக தெரிந்து கொள்ளும்படிச் செய்து விட்டதென்று ஆறாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. "திங்களை பாம்புகொண்டற்று" என்று குறட்பா முடிகிறது. அன்னையின் சொல்லும், ஊராரி எடுக்கும் கவ்வையும் எப்படி இருக்கின்றன வென்பதை ஏழாம் பாடல் எடுத்துக் காட்டுகின்றது. நீளும் இந்நோய்' என்று குறட்பா முடிகின்றது. மிகவும் சிந்தனைக்குரியதாகும். ஊரார் எடுக்கின்ற அலரினால் அவர்களின் காதல் பிணைப்பினை நிறுத்தவோ தடுக்கவோ முடியாதென்று எட்டாம் பாடல் உணர்த்துகிறது. அப்படித் தடுத்து விடுவோம் என்று நினைப்பது, நெய்யினால் நெருப்பினை அனைத்து விடுவோம் என்று கூறுவது போன்றதே யாகும். நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்’ என்று அழகுற குறட்பா அமைந்துள்ளதாகும். தனித்திருக்கும் காதலி காதலன் வராது இருந்தமை குறித்து வருந்தி கூறுவதை ஒன்பதாம் பாடல் விளக்கப் படுத்துகிறது. அலர் துளற்றியது நன்மைக்கென்றே காதலி கூறுவதைப் பத்தாம் பாடல் தெரிவிக்கின்றது. ஊரார் அலர் எடுத்து விட்டனர். பலரும் அறிந்து விட்டனர். இனி காதலனுடன்தான் புறப்பட்டுப் போய் விடுவது தான் நல்லதென்றாள், அதற்குகாதலரும் இசைவார் என்ற அவள் எண்ணத்தினை பத்தாம் பாடல் குறித்துணர்த்து கிறது. தாம் வேண்டின் நல்குவர் என்ற குறட்பா காதலி யின் உள்ளத்தினை உணர்த்திவிட்டது. அடுத்து வருவது கற்பியலாகும், - -