பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தொடர்ந்து அவள் வருத்தத்தினை நான்காம் பாடலும் கூறுகிறது. தெளிந்த சொல்' என்று குறித்து நாயகனின் அன்பு மொழியினை அவள் நினைவுபடுத்துகிறான். நாயகன் பிரியாது இருக்குமாறு செய்வாயாக என்று தோழிக்கு நாயகி கூறுவதை ஐந்தாம் பாடல் உணர்த்து கிறது. பிரிவு ஒம்பல்' என்று குறிப்பிடுகிறாள். தனது நாயகனை அவள் வன்கண்ணர் என்று கூறிவிடு கின்றாள். ஆறாம் பாடல் இதனைக் கூறுவதாகும். திரும்பி வந்து அன்பு காட்டுதல் அரிது என்று கூறுகின்றாள். நழுவி வருகின்ற கை வளையல்கள் நாயகன் பிரிந்து விடுவதைப் புலப்படுத்துகின்றன என்று ஏழாம் பாடல் உணர்த்துகிறது. இறை இறவா நின்றவளை’ என்பது சிந்திக்கத் தக்க தாகும். . . பிரிவுத்துன்பத்தினை இனியார்ப் பிரிவு என்று குறித்து எட்டாம் பாடல் உணர்த் துகின்றது. விட்ட உடன் சுடுகின்ற காமத்தி என்று ஒன்பதாம் பாடல் குறிக்கின்றது. மற்ற தீ தொட்டால்தான் சுடும். தன்னால் பிரிந்து வாழ்வது மற்றவர்களால் முடிவதைப் போல், முடியாது என்று நாயகி கூறுவதைப் பத்தாம் பாடல் காட்டுகிறது. 117. படர் மெலிந்து இரங்கல் பட ரால் மெலிந்து வருந்துதல் என்பதாகும். படர் என்பது துன்பம் என்று பொருள்படும். பொழுது கண்டு இரங்கல்' என்ற அதிகாரமும் இரங்கல்' என்று முடிகிறது. காம நோயாகிய நோயினை என்னால் மறக்க முடியவில்லை என்று நாயகி கூறுகின்றாள். இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல் வருகின்றதென்று குறிக்கின்றாள். 3. .. - “. .w.