பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இதனை முதற் குறட்பா எடுத்துக் காட்டுகிறது. 'norship, நீர்" என்று குறிப்பிட்டுக் காட்டுவது கிந்தனைக்குரியதாகும், இரண்டாம் பாடல் அவளால் மறைக்கமுடியாத நிலைமை யினைக் கூறுகின்றது. நாயகருக்கு உரைப்பதற்கும் நாணமாக இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகிறாள். மூன்றாம் பாடல் காவடித்தண்டினைக் காட்டி அவள் நிலையினைப் புலப்படுத்துகின்றது. உயிர் காவாத்துரங்கும்" என்றுகுறட்பா அமைத்துக் காட்டுகின்றது. காமக்கடலே அவளுக்கு உண்டாகி இருக்கிறதென்றும் அதனைக் கடக்கக்கூடிய புணை இல்லை யென்று வருந்துவதை நான்காம் பாடல் எடுத்துரைக் கின்றது. நீந்தும் ஏமப்புணை' என்று குறட்பா குறிக் கின்றது. காதலியாகிய நட்புக்கொண்ட தன்னிடத்திலேயே இவ்வாறு நடந்து கொள்ளுகின்ற அவர் பகைமைக்கள் எப்படி இருப்பாரோ என்று அவள் வியப்புறுவதை ஐந்தாம் பாடல் விளக்கம் செய்கின்றது. "எவன் ஆவர்' என்று அவள் கேட்கின்றாள். இன்பம் கடல் போல் இருக்கின்றதென்றும், பிரிவுத் துன்பம் அதனை விடப் பெரிதாக இருக்கின்றதென்றும் ஆறாம்பாடல் எடுத்துரைக்கின்றது. காமக் கடும் புனலைநீந்திக் கரைகாண முடியவில்லை என்பதனை ஏழாம்பாடல் உணர்த்துகின்றது. இரவெல்லாம் தூக்கமின்றி அவள் இருப்பவளாகி விட்ட படியால் இரவுக்கும் அவளைவிடத் துணை யாரும் இல்லை யென்று எட்டாம் பாடல் உணர்த்துகின்றது. எனையல்லது இல்லை துணை' என்று குறட்பா முடிகின்றது. நாயகனை விடக் கொடுமையானது இந்த இரவுப் பொழுது என்று ஒன்பதாம் பாடல் குறிக்கின்றது, இரவுகள் அதிக நேரமாய் செல்லுகின்றனவாம். கண்கள் வெள்ளம் போன்ற நீரைக் கொண்டுள்ளனவென்று பத்தாம் பாடல் கூறுகின்றது. அந்த நீரைக் கண்களால் நீந்த முடி வில்லையாம். -