பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#95 118. கண்விதுப்பு:அழிதல் விதும்பல் என்பது விருப்பத்தால் விரைதலாகும். கண்கள் தலைவனைக் காணும் விருப்பம் மேலிட்டு விரை வதைக் குறிப்பதாகும், கண்கள் அழுவது எதற்கு என்ற கேள்வியினை அவள் கேட்கின்றாள். ஏனெனில் முதலில் அவைகள் காட்டியதால்தான் அவள் நாயகனைக் காண முடிந்தது. அப்படிச் செய்தவை இப்போது அழுவது அவளுக்கு வியப்பாக இருக்கின்றது. இதனை முதற் குறட்பா எடுத்துரைக்கின்றது. இரண்டாம் படால் மேற்கூறிய கருத்தினையே மேலும் விளக்கமாகக் கூறுகின்றது. பைதல் உழப்பது எவன்' என்று முடிகின்ற இரண்டாம் பாடல் முதலில் நோக்கிய கண்கள் இப்போது அழுவது ஏனோ என்ற விளக்கத்தினைத் தருகின்றது. கண்கள் தாமே முதலில் காதலரைக் கண்டு மகிழ்ந்து இப்போது பிரிந்தபோது அழுவது நகைப்புக்கு இடமாக இருக்கின்றதென்று மூன்றாம் பாடல் கூறுகின்றது. இது நகத்தக்கது உடைத்து’ என்று குறட்பா முடிவாகக் கூறியது சிந்தனைக்குரியது. . நான்காம் பாடல் இக்கண்களினால் வந்த காம நோயினைக் கூறுகின்றது. ஒழிவில்லாத நோயினை உய்வில் நோய்' என்று அவள் கூறுன்றாள். கண்கள் தூங்காமல் துன்புறுகின்றனவென்று ஐந்தாம் பாடல் குறிக்கின்றது. ஆறாம் பாடல் வியப்பான கருத்தினைக் கூறுகின்றது. தனக்கு துன்பத்தினை உண்டாக்கிய கண்கள் துன்பம் அடைவது இன்பமான துதான் என்று அவள் குறிப்பிடு கின்றாள். அவ்வாறே ஏழாம் பாடலும் அந்த நாயகி தனது கண்களைப் பார்த்துப் பேசுவதையே குறித்துக் காட்டு கின்றது. நாயகர் உள்ளத்திலேயே இருந்தாலும் காணா திருப்பது துன்பம் என்று கருதுகின்றாள். நாயகர் வராதிருந்