பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 நாயகன் பிரிந்ததால் பசப்பு வந்ததே என்பதைக் காட்டுவது ஐந்தாம் குறட்பாவாகும். விளக்கு அணைகின்ற நேரத்தில் இருட்டு வந்து சூழ்ந்து கொள்வதைப்போல, நாயகனுடைய முயக்கம் நீங்கும் நேரம் பார்த்து நெருங்கில் வந்துவிட்டது இந்தப் பசப்பு என்று கூறுகின்றாள். 120. தனிப்படர் மிகுதி தனியாகிய படர் மிகுதி என விரியும். அதாவது படரி மிகுதி - துன்பம் மிகுதி - தலைவன்கண் இல்லாமல் தன்னிடம் மட்டும் இருப்பதைக் கூறுவதாகும். அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தான் ஆனபடியால் அவனிடம் இல்லை என்பதாயிற்று. 'படர் மிகுதி என்று குறிப்பிட்ட தால் மிகுந்த துன்பத்தில் இருக்கின்றாள் என்பது உணர்த்தம் கட்டதாகும். - தம்மால் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் காம நுகர்ச்சி என்னும் பரலில்லாத கனியைப். பெற்றவராவர் என்று முதற் குறட்பா கூறுகின்றது. காழில் கனி என்று சிறப்பித்துக் கூறினார். தடையின்றி நுகரம் படுவதால் காழில்கனி - என்று குறிப்பிட்டார். வாழுநம் என்னும் செருக்கு என்று இரண்டாம் குறட்பா முடிகிறது. தமது கணவரால் விழைப்படும் மகளிர் இந்தப். பெருமையுடன்-செருக்குடன் - வாழ்வார்கள் என்பதாகும். தான்காம் பாடல், கெழீஇயிலர் என்று குறிப்பிடுகின்றது. ஆறாம் பாடல் அழகிய உவமையினைக் கூறுகின்றது. "விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்" என்பது பன்முறை. பும் சிந்திக்க வேண்டியதொன்றாகும். இதனை மேலும் விளக்குவது ஏழாம் பாடலாகும். அ. வி.-13 -