பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கனவு எப்போதும் இருக்க வேண்டும் என்கின்ற அவள் நினைப்பினை ஆறாம் பாடல் உணர்த்துகிறது. நனவு இருக்கக்கூடாது என்பவள், நனவு என ஒன்று இல்லை. யாயின்’ என்பதாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறாள். நனவு, வர வில்லையென்றால், காதலர் நீங்கலர்' என்பது அவள் கருத்தாகும். அவள் வருத்தத்தினை ஏழாம் பாடல். கூறுகிறது. நேரில் வாராதவர் கனவில் வந்து வருத்துவது ஏனோ என்று கேட்கின்றாள். கொடியார்,என்றும், ‘என் எம்மைப். பிழிப்பது என்றும் அறிவுறுத்துகின்றாள். நேரில்வாராததால் "கொடியார் என்று குறிப்பிட்டாள். துரங்கும் போதும். விழிக்கும்போதும் அவளுடைய நிலையினை எட்டாம்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இக்குறட்பா, விரைந்து' என்று. முடிவது, மிகவும் சிந்தனைக் குரியதாகும். ஊரார், காதலரைப்பற்றித் தவறாகக் கூறுவதைக் குறித்து, காதலர்க் காணாதவர் என்று பேசுவதை ஒன்பதாம் பாடல் உணர்த்துகிறது. தனது காதலரைப்பற்றி குறை கூறி ஊரார் பேசுவதை அவளால் தாங்க முடியாமல், 'கனவினான் காணார்கொல் இவ் ஊரவர் என்று அவன் அறிவுறுத்துவதைப் பத்தாம் பாடல் குறிப்பிடுகிறது. 123. பொழுதுகண்டு இரங்கல் மாலைப்பொழுது வந்தபோது அதனைக் கண்டு தலை மகள் வருந்துவதைக் கூறுவதாகும். 'படர் மெலிந்து இரங்கல்' என்பதைப் போன்றதாகும். உயிரி உண்ணும். வேலை நீ என்று முதற் குறட்பா கூறகிறது. காதலர். பிரிந்திருக்கும் போது வருகின்ற மாலைப்பொழுது, அவளுடைய உயிரைக் குடிக்கும் இறுதிக்காலமாக இருக் கிறதாம்.