பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கறுகிறது ஒன்பதாம் குறட்பாவாகும். உயிர் நீங்கும் நிலையில் இருக்கின்றாள் என்பதைப் பத்தாம் பாடல் கூறுகின்றது. பொருள் தேடி நாயகன் சென்றுள்ளான் என்றும் குறிப்பிடுகின்றான். 124. உறுப்பு நலன் அழிதல் தலைவி வருத்தம் மிகுதியும் கொண்டவளாகி விட்ட காடியால் அவளுடைய உறுப்புகள் அழகினை இழந்துவிட்டன என்பதனைக் கூறுவதாகும். நறுமலர் நாணினகண்’ என்று குறித்து மலர்களைக் கண்டு கண்கள் நாணம் கொண்டன வென்பதைக் கூறுகிறாள். முன்பெல்லாம், மலர்கள் அவர்களுடைய கண்களைக் கண்டு நாணமுற்றது என்பது குறிப்பிட வேண்டியதாகும். அதற்குக் காரணம் சேண் சென்றார்' என்றும் குறித்துக்காட்டப்பட்டது. க ண் க ளி ன் தன்மையினை இரண்டாம் பாடலும் விளக்குகின்றது. பசந்து பணிவாரும் கண் என்று உணர்த்தப்பட்டது. அவைகள் தயந்தவே நல்காமை சொல்லுவ போலும் என்று கூறியது சிந்தனைக் குரியதாகும். தோள்களின் நிலைமையினை மூன்றாம் குறட்பா எடுத்துக்காட்டுகிறது. தணந்தமை சால அறிவிப்ப", என்று தோள்கள் கூறுவதைக் குறிப்பிடுகிறாள். நான்காம் பாடல் வளையல்களும் கழலுகின்றன என்பதனைக் கூறுகிறது. பைந்தொடி சோரும் என்று குறித்துக்காட்டப்படுகிறது. இயற்கையழகும் என்பதை , தொல்கவின் என்பதால் அறியமுடிகிறது. செயற்கையழகும் நீங்கியதென்பதாகும். ஆதோள் வளையல்கள் எனப்படுகின்ற தொடியும், தோன் களும் மெலிகின்ற வென்று ஆறாம் பாடல் எடுத்துக்காட்டு