பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 கிறது. தொடியோடு தோள் நெகிழ என்று குறித்துக் காட்டப்படுகிறது. ஏழாம் பாடவில், தனது நெஞ்சத்தினைப் பார்த்து அவள் வேண்டிக்கொள்வது கூறப்படுகிறது. நெஞ்சே என்று. அவள் அழைக்கின்றாள். நாயகரை கொடியார்” என்று குறிக்கிறாள். முன்பொருநாள் அவளுடைய நுதல் பசப்பு நிறம் கொண்டதைக் குறித்து எட்டாம் பாடல் விளக்குகிறது. இக்குறட்பா மிகவும் சிந்தனைக்குரியதாகும். கண்கள் பசப் புற்ற நிலையினை ஒன்பதாம் பாடல் தெளிவு படுத்துகிறது. "தண்வளி - பசப்புற்ற - பேதை - பெருமழைக்கண் - ஆகிய இவைகள் சிந்தித்தறிய வேண்டுவனவாகும். ஒளி பொருத்திய அவளுடைய நுதல் - நெற்றி - பசப்புற்றதைக் கண்டு துன்பமுற்றன என்பதைப் பத்தாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. ஒண்ணுதல் செய்ததுகண்டு’ என்று குறட்பா குறித்து உண்மையினைத் தெளிவு படுத்துகின்றதாம். 125. நெஞ்சொடு கிளத்தல் வருத்தம் மிகுதியால் தனக்கு ஒரு பற்றுக் கோடும் இல்லாமல் செய்வதறியாது தன்னுடைய நெஞ்சொடு சொல்லுதலாகும். 'நினைத்தொன்று சொல்லாயோ' என்று முதற்குறட்பா தொடங்குகிறது. ஒன்றிலும் தீராத நோயினைத் தீர்க்கும் மருந்தினை அறிந்து சொல்வாயாக என்று தனது நெஞ் சினைக் கேட்கின்றாள். சொல்லாயோ-நெஞ்சே-எவ்வ நோய்-மருந்து, என்பன மிகுதியும் சந்திக்கத்தக்கனவாகும்.