பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விளக்குகின்றன. மழையே அமிழ்தம் என்று கூறப்படு கின்றது. - இரண்டாவது பாடல் அணியழகு சிறந்ததாயுள்ளது. அமிழ்தம், துப்பு, பசி, உழவர், புயல், பசும்புல், எழிலி, பூசனை, தானம், தவம், ஒழுக்கம் முதலிய சிறந்த சொற்கள் இ ந் த அதிகாரத்தில் காணப்படுகின்றன. 'வானோர்களுக்குப் பூசனை' நடக்காது என்று கூறி, மழை யின் பெருஞ்சிறப்பினைக் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. இல்லறத்தார் செய்யும் தானத்திற்கும் துறவோர் செய்யும் அறத்திற்கும் முதற் காரணம் மழையே என்று சிறப்பிக்கப் பட்டது. காதற் சிறப்பு உரைத்தல்-என்ற அதிகாரத்தில், சிறப்பு என்ற சொல் அமைக்கப்பட்டுள்ளது. 3. நீத்தார் பெருமை முற்றத் துறந்த முனிவர்களின் பெருமையினைக் கூறுதலாகும். அவர்களே உலகிற்கு அறநெறியினைக் கூறும் அந்தணர்களாகும். ஒழுக்கத்தின் முழுமையும் நிறையப் பெற்றவர்கள். இவ்வதிகாரத்தில், முதன் மூன்று பாக்களும் எல்லாப் பெருமையிலும் நீத்தார் பெருமையே சிறந்த தென்று கூறுகின்றன. - நான்கு முதல் ஏ ழ 1 ம் பாடல்வரை, நீத்தார் பெருமைக்குக் காரணம் ஐந்து அவித்தலும், தவப்பயிற்சியும் மெய்யுணர்தலுமே யாகும் என்பதைக் கூறுகின்றன. அம்முனிவர்களது ஆணை எட்டு, ஒன்பது பாக்களில் விளக்கப்படுகின்றன. பத்தாம் பாடல் உயிர்களிடம் அவர்கள் கொண்டுள்ள அருளுடைமையினைக்கூறும். - அருளுடைமை, தவம், மெய்யுணர்தல், நிலையாமை, துறவு, அவாவறுத்தல் முதலிய அதிகாரங்கள், ஒப்பிட்டுப் டிரர்த்தற்குரியன. உலக வழக்கில் வைத்து, நீத்தாரின்