பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 குறிக்கின்றது. பிரிந்த காதலரை மனதில் நினைத்து இன்றும். அழகினை இழந்து கொண்டே இருக்கின்றாள் என்று. பத்தாம் குறட்பா கூறுகிறது. "இன்னும் இழத்தும் கவின்' என்று குறட்பா முடிகிறது. 1 26. நிறை அழிதல் மனத்துள் அடக்கி வைத்திருக்க வேண்டியனவற்றை. வேட்கை மிகுதியான் அடக்க முடியாமல் வாய்விட்டுக் கூறி. விடுவதாகும். நிறைகுணம் பிறர் அறியாமல் வைத்திருக்கும். அதுவே அழிகின்றது என்று கூறுகின்றாள். முதற் குறட்பாவில், காமக்கணிச்சி-நிறைகதவுதாணுத்தாள்-ஆகிய மூன்றும் கூறப்படுகின்றன. உடைப் பதும், உடைபடுவது எது என்பதும் தெளிவாக்கப்பட்டது. 'நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்’ என்று இரண்டாம் பாடல் குறிப்பிடுகிறது. காமம் என்பது இரக்க மில்லாமல் கொடுமை செய்கிறதென்பதைக் கூறுகிறது. காமத்தினை எப்படியேனும் மறைத்தானும் வெளிப்பட்டு: விடுகிறதாம். - மூன்றாம் குறட்பாவில், தும்மல் போல் தோன்றிவிடும்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மறைப்பேன்’ என்று அவள் செய்வதையும் குறிப்பிட்டாள். --- நான்காம் பாடலில், நிறையுடையேன் என்பேன்" என்று அவள் குணத்தினையும், மறை இறந்து மன்றுபடும்" என்று காமத்தின் தன்மையினையும் உணர்த்துகிறாள். ஐந்தாம் பாடல், பெருந்தகைமை என்ற குணம் காம நோய் உற்றாருக்கு இல்லை என்று தெளிவுபடுத்துகிறது. 'பெருந்தகைமை'-காமநோய்”-அறிவதொன்று அன்று. என்பன உண்மையினை நன்கு உணர்த்தி விடுகின்றன. தனக்கு வந்த நோயினை இகழ்ந்து பேசுவதை ஆறாம். பாடல் கூறுகின்றது. என்னை உற்றதுயர் என்று குறட்பா