பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 விடப்படும் என்பதனை மறப்பின்' என்பதும் கலங்கழியும்" என்பதும் காரிகை" என்பதும் உணர்த்துவனவாகும். 'இன்றும் உளேன்' என்று முடிகின்ற மூன்றாம் குறட்பா, நாயகர் திரும்பி வந்து விடுவார் என்ற நினைப்பால் உயிர்வாழ்கின்றேன் என்று அவள் கூறுவதை விளக்குகின்றது. அவளுடைய நெஞ்சம் மிகவும் பணைத்து பெருமிதம் கொண்டு எழுச்சி கொள்கிறது என்று கூறுகின்றாள். அதற்குக் காரணத்தைக் கூறும் நான்காம் குறட்பா, வரல் நசைஇ' என்று கூறுகின்றது. அவர் வருவார் என்ற விருப்பமே என்பதாம். கோடு கொடு ஏறும் என் நெஞ்சு என்று கூறியது. சிந்தனைக்குரியதாகும். அவளுடைய தோளின் மேல் உள்ள பசப்பு நிறம் நீங்கிவிடும், என்று ஐந்தாம் குறட்பா கூறுகின்றது. ஏனெனில், நாயகன் வந்ததும், அவரைக் கண்டவுடன் போய்விடுமாம். காண்க-கொண்கன்-கண்ணாரக் கண்டபின்-பசப்பு என்பன சிந்தனைக்குரியவைகளாகும். அந்த நாயகியின் வேட்கை மிகுதியினைப் பருகுவன்' என்று கூறும், ஆறாம் குறட்பா தெளிவுபடுத்துகிறது. ஒருநாள்-நோய்-வருகஎல்லாம் கெட-என்று காணப்படுபவைகள் இன்பம் நிறைந்த உள்ளத்தாள் பேசும் இனிய சொற்களைக். குறித்தவைகளாகும். - நாயகனை, கண்ணன்ன கேளிர்" என்று அவள் குறிக்கும் ஏழாம் பாடல் அவள் இன்னதுதான் செய்வேன் என்று கூற முடியாத இன்பத் திகைப்பில் இருக்கின்றாள் என்பதைக் காட்டுகிறது. புலப்பேனோ-புல்லுவேனோகலப்பேனோ என்றெல்லாம் நினைக்கின்றாள். எட்டாம் பாடல் தலைமகன் வீட்டிற்குச் சென்று. மனைவியுடன் மகிழ்ந்திருப்பேன் என்று நினைப்பதைக், கூறுகிறது. வேந்தன் தொழில் புரிந்து வெல்வானாக என்று. கூறுகின்றான். பிறகு அவன் வீட்டிற்குச் சென்று மனைவி,