பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 129. புணர்ச்சி விதும்பல் தலைமகளும் தலைமகனும் இன்பம் நுகர்தற்கு விரைத லாகும். குறிப்பு அறிவுறுத்தப்பட்டபின் இஃது நிகழ்வு தாகும். களவியற் பகுதியில் புணர்ச்சி மகிழ்தல்" என்று. அதிகாரம் கூறப்படுகிறது. முன்பு, அவர் வயின் விதும்பல்" என்று கூறப்பட்டது. இப்போது புணர்ச்சி விதும்பல். கூறப்படுகிறது. முதற் குறட்பா, காமத்திற்கு உண்டு என்று முடிந்து, நினைத்தாலே களிப்பும், கண்டாலே மகிழ்ச்சியும் காமத். திற்குத்தான் உண்டு என்று கூறப்படுகிறது. மகளிர்க்குக் காமம் மிகுதியாக இருந்தபோது தினையள. வும் ஊடாம்ை வேண்டும் என்று இரண்டாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. ஊடல் உவகை-அதிகாரம், சிந்திக்கத் தக்கது. - நாயகன் தனக்கு வருத்தம் தருவதையே செய்தாலும், அவனைக் காணாமலிருக்க முடியவில்லையென்று மூன்றாம். குறட்பா கூறுகின்றது. சிறுபிணக்காகிய ஊடல் செய்யலாம் என்று நினைத். திருந்தாலும் அது கூடவில்லை என்பதனை நான்காம் குறட்பா குறிக்கின்றது. மையெழுதும் கோலைக் காட்டி ஐந்தாம் குறட்பா அறிவுறுத்துகிறது. நாயகனைக் கண்டபோது அவர்மீது. குற்றத்தினையே காண முடியவில்லையென்று ஐந்தாம் பாடல் தெரிவிக்கின்றது. அவ்வாறே, ஆறாம் குறட்பாவும். தெரிவிக்கின்றது. 'காணுங்கால் - காணாக்கால்" என்று குறிப் பி ட் டிருப்பவைகள் சிந்தனைக்குரியனவாகும். நீரில்பாய்பவரை" ஏழாம் பாடல் காட்டுவது சிறப்பாக அமைந்துள்ளதாகும். புலந்துநிற்பது-சிறுபிணக்கு செய்து கொண்டிருப்பது முடிய