பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 131. புலவி புலவி என்பது சிறுபிணக்கு என்று சொல்லப்படும். இருவர் நெஞ்சமும் புணர்ச்சி வரும்போது புலக்கக் கருதிய போது ஒருவரோடு ஒருவர் புலத்தலாகும். நாயகனுடைய துன்பத்தினைக் காணுவோம்-என்று கூறி, தோழி தலைவி யைப் பார்த்து நாயகரை புல்லாதிருப்பாயாக என்று கூறு வதை முதற்குறட்பா கூறுகிறது. அல்லல் நோய் காண்கம் சிறிது’ என்று குறட்பா சொல்லுகிறது. புலவி என்பது உப்பு போடுவது போல அளவோடு இருத்தல் வேண்டும். அது மிகுந்து விடக்கூடாது. இதனை இரண்டாம் குறட்பா காட்டுகிறது. 'உப்பு அமைந்தற்றால்’-என்பது சிந்திக்கத் தக்கதாகும். மூன்றாம் குறட்பா, புலந்தாரை புல்லாவிடல்" என்று முடிந்து, புலத்தல் செய்த தலைவியைக் கூடுதல் வேண்டும்புலவியை நீக்குதல் வேண்டும் என்று கூறுகிறது. நான்காம் பாடல் அருமையாகக் கூறி விளக்கம் தருகிறது. நீர் பெறாமல் வாடிய வள்ளிக் கொடியை அடியில் அறுத்ததைப் போன்றதாகும் என்று கூறுவது நான்காம் பாடலாகும். நாயகிபால் நிகழும் நிறைந்த புலவிதான் நாயகருக்கும் அழகு என்று ஐந்தாம் பாடல் குறிக்கிறது. நலத்தகை நல்லவர்க்கு ஏர்' என்று குறட்பா எடுத்துக் காட்டுகிறது. ஆறாம் பாடல், கனியும் கருக்காயும் அற்று' என்று கூறி, காமம் எப்போது அதிகம் முதிர்ந்த பழமாகவும், கருக் காயாகவும் ஆகும் என்பதனைக் கூறி தெளிவுபடுத்துகிறது. ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு என்றும் அதன் காரணம் யாது என்றும் ஏழாம் பாடில் எடுத்துக் காட்டுகிறது.