பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. i நல்லாற்றின் நின்ற துணை, ஒம்பல்தலை, பழியஞ்சிப் பாத்துாண், பண்பும் பயனும் அது, போய்ப் பெறுவது எவன் எல்லாம் தலை, நோன்மை உடைத்து, அறன் எனப் பட்டதே, தெய்வத்துள் வைக்கப்படும் என்பன நினைவில் நிறுத்தற்குரியன. இந்த அதிகாரத்தில், நான்கு பாக்களில் துறவறத் தினைச் சுட்டிக் காட்டி இல்லறத்தின் பெருமையினை வற்புறுத்துகின்றார். து ற ந் தா ர் க் கு ம் இல்லறத்தானே துணையென்றும் கூறுகின்றார். அதிகாரங்களில் வாழ்க்கை' என்ற சொல் ஐந்து ஆறு ஆகிய இரண்டு அதிகாரங்களில் மட்டும் காணப்படுகின்றது, 6. வாழ்க்கைத் துணைநலம் இல்வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் நற்குண நற்செயல்களைக் கூறுவது. நலம்' என்பது நன்மையினைக் கூறுதலாகும். வாழ்க்கைத் துணை' என்பதுடன் நலம்’ என்றது. நன்மைக்காகவே, வாழ்க்கைத் துணைவி என்ப தளைக் குறித்தது. முதற் குறட்பா இரண்டு சிறந்த நன்மைகளைக் கூறுகின்றது. இரண்டாவது, மூன்றாவது குறட்பாக்கள், இல்வாழ்க்கைக்குத் தேவையானது இல்லாளது மாட்சியே யல்லாமல் மற்றவையல்ல என்பதனைக் கூறுகின்றன. ஐந்தாவது குறட்பா தெய்வங்களைத் தொழாமல் கற் புடை மகளாக இருப்பவள் எத்தகைய சிறப்பிற்கு உரியவள் என்பதைக் காட்டுகிறது. அவளுடைய ஆற்றல் விளக்கப் ப.து. கற்புடைய பெண்ணின் நான்கு கடமைகளும் ஆறாவது குறட்பாவில் விளக்கப்படுகின்றன. ஏழாவது குறட்பா தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்பதனையும், எட்டாவது குறட்பா கற்புடை மகளிரை தேவலோகத்தாரும் பாராட்டுவர் என்பதனையும்