பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது குறட்பா, தகை சான்ற சொல்லினைக் காப்பாற்றாவிட்டால் வரும் குற்றத்தினையும், பத்தாவது குறட்பா வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் நன்மக்கட்பேறு என்பதனையும் கூறுகின்றன. இந்த அதிகாரத்தில், மனைத்தக்க மாண்புடையாள், வளத்தக்காள், எனை மாட்சித்தாயினும் இல், இல்லதென், உள்ளதென், பெருந்தக்கயாவுள', பெய் எனப் பெய்யும், சோர்விலாள், எவன் செய்யும், பெருஞ்சிறப்பு, ஏறு போல் பீடு நடை, மங்கலம், நன்கலம் என்பன நினைவில் வைக்கப் படவேண்டியன. துணை என்ற சொல் பெரியாரைத் துணைக் கோடல்’ என்ற அதிகாரத்தில் மட்டும் காணப் படுகிறது. 7. மக்கட்பேறு நன்மக்களால் அடைகின்ற நன்மையினையும், இன்பத் தினையும் கூறுவதாகும். நன்மக்களைச் செல்வமாகவே கூறுவதால் பேறு என்றார்: 'நன்மக்கட்பேறு' என்பது முந்திய அதிகாரத்தில் பத்தாவது குறட்பாவில் குறிக்கப் பட்டது. மக்கட் பேற்றின் சிறப்பினை முதல் குறட்பா விளக்கு கின்றது. இரண்டாவது, மூன்றாவது குறட்பாக்கள் நன் மக்களைப் பெற்றவர்கள் மறுமைப் பயனைப் பெற்று இன்புறுவர் என்று கூறுகின்றன. நான்கு, ஐந்து, ஆறு குறட் பர்க்கள் இப்பிறவியில் பெற்றோர் அடையும் இன்பத் தினைக் குறிக்கின்றன. ஏழாவது குறட்பா தந்தையின் கடமையினையும், எட்டாவது;குறட்பா தந்தையினை விட உலகத்தார் மகிழ்வர் என்பதனையும் விளக்குகின்றன. தாய் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவு இல்லாததால் அதனை தனியாக ஒன்பதாவது குறட்பா கூறுகின்றது. பத்தாவது குறட்பா மகனின் கடமையினைச் சுட்டிக் காட்டிற்று.