பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 3 அறிவறிந்த மக்கள், எழு பிறப்பும் தீயவை தீண்டா, தம்தம் வினையான் வரும், சிறுகைஅளாவிய கூழ் மக்கள் மெய் தீண்டல், மழலைச் சொல், முந்தி இருப்பச் செயல், மன்னுயிர்க்கு, கேட்டதாய், என் நோற்றான், என்பன நினைவில் வைத்துக் கொள்ளப்படவேண்டியவைகளாகும். ஆறாவது குறட்பா குழவினையும் யாழினையும் குறிக் கின்றது. இசைக் கருவிகள் அனைத்தையும் இரண்டு வகை களாகப் பிரிக்கலாம். ஒரு வகை வாயினால் வாசிப்பது; மற்றொரு வகை கையினால் வாசிப்பது. வாயினால் வாசிக்கப்படும் இசைக்கருவிகளை, குழலும், கையினால் வாசிக்கும் இசைக்கருவிகளை யாழும் குறித்து நிற்பதால், இரண்டும் உலகில் வழங்கும் இசைக் கருவிகள் அனைத்தை யுமே குறித்தன என்று கொள்ளுதல் வேண்டும். - தந்தை மகற்குச் செய்வதை நன்றி என்றும் மகன் தந்தைக்குச் செய்வதை உதவி என்றும் கூறியது சிந்தனைக் குரியது. 8. அன்புடைமை மனைவி, மக்கள் முதலிய தொடர்புடையார்களிடம் அன்பு கொண்டு நடத்தல். இல்லறம் நடைபெறுவதற்கு அன்பே அடிப்படைக் காரணம் ஆகும். அருள் பிறத்தற்கும் அன்பே காரணமாகும். வாழ்க்கைத் துணைவியிடம் அன்பு இல்லையேல் இல்லறம் நடவாது. "உடைமை' என்ற அடைமொழியில் பத்து அதிகாரங்கள் காணப்படுகின்றன. இல்லறத்தில் ‘அன்பு' கூறியதுபோல் துறவறத்தில் 'அருள்' கூறப்பட்டது. முதற் குறட்பா அனைவரிடத்தும் அன்பு உண்டு என்ப தைக் கூறுகின்றது. இக்குறட்பாவில் வினா எழுப்பப்பட்டு விடை கூறப்படுகிறது. அன்பினது பெருஞ் சிறப்பினை இரண்டு முதல் ஆ று வ ைர யு ள் ள குறட்பாக்கள்