பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கூறுகின்றன. அன்பு இல்லாவிட்டால் உண்டாகும் குற்றங் களைக் கடைசி நான்கு குறட்பாக்கள் குறிக்கின்றன. என்பில்லாத புழுக்களை வெயில் காய்வது, வற்றல் மரம் தளிர்ப்பது ஆகிய அணிகள் அழகுற அமைந்துள்ளன. அடைக்கும் தாழ், புன்கண் நீர், என்பும் 2.ரியர், என்போடு இயைந்த தொடர்பு, அன்பு ஈனும், வழக்கென்ய மறத்திற்கும் அஃதே துணை, அன்பிலதனை அறம், வற்றல் மரம், அகத் துறுப்பு, என்பு தோல் போர்த்த .டம்பு, முதலியன நினைவுக்குரியன. ஏழாவது குறட்பாவில் 'அறம்" தண்டிக்கும் என்று கூறியது சிந்தனைக் குரியது. உலக மக்கள் வெறுப்பார்கள் என்றும், உலகம் தண்டிக்கும் என்பதும் மனச்சாட்சியே கண்டிக்கும் என்பதுமாம். 9. விருந்து ஓம்பல் தம்மிடம் வந்த விருந்தினரைப் போற்றிக் காத்தல் என்பதாகும். ஓம்பல்' என்று அடைமொழியுடன் இந்த ஒரு அதிகாரம்தான் காணப்படுகிறது. விருந்து' என்பது புதிது என்று பொருள்படும். கணவன் மனைவி இருவராலும் சேர்ந்து செய்யப்படுவதாகும். இல்லறத்தார்க்கே உரிய தாகும். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று போற்றப்பட வேண்டிய ஐவருள், முதலிரண்டும் கண்ணுக்குப் புலனாகாதவரையும், பிந்திய இரண்டும் புலனாவோரையும் கூறி, ஈகை செய்து போற்றப்பட வேண்டிய விருந்தினரை இடையில் வைத்து சிறப்பித்தார். முதலிரண்டு குறட்பாக்களும் விருந்தோம்பலின் சிறப் பினைக் கூறுகின்றன. மூன்று, நான்கு ஐந்து ஆகிய பாக்கள் விருந்தினரை ஒம்புபவர்கள், இம்மையில் அடைகின்ற