பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 பெரும் பயனை விளக்குகின்றன. வானத்தவர்கள, விருந் தின் சிறப்பினையறிந்த இல்லறத்தானைப் போற்றுவர் என்பதனை ஆறாவது குறட்பா கூறுகின்றது. விருந்தினர்களைப் போற்றுவதுதான் வேள்வியாகும் என்பதனைக் குறித்து உண்ர்த்துவது ஏழாவது குறட்பா வாகும். பல தகுதிகள் உடையவர்களாக வகைப்படுவர் என்பதனையும் இக்குறட்பா சுட்டிக் காட்டுகிறது. வேள்வி யின் பயன் கூறப்பட்டது. விருந்தோம்பல் செய்யாவிட்டால் வருகின்ற குற்றத் தினை எட்டு, ஒன்பது குறட்பாக்கள் காட்டுகின்றன. விருந்தினரின் மனப் பண்பினையும், விருந்தோம்புவார்க்கு இன்முகம் வேண்டும் என்பதனையும் பத்தாவது குறட்பா விளக்கிற்று. - - வேளாண்மை, சாவாமருந்து, பாழ்படுதல்இன்று, செய்யாள் உறையும், வித்தும் இடல் வேண்டும் கொல்லோ, நல்விருந்து, வேள்விப்பயன், பற்றற்றேம் என்பர், மடைமை முகம் திரிந்து என்பன நினைவில் இருக்கத் தக்கனவாகும். சாவா மருந்தாக இருந்தாலும் விருந்தினர்க்கு அளித்தல் வேண்டும் என்பது சிறப்பாக அமைக்கப்பட்டதாகும். விதைக்கு வைத்திருப்பதையும் சமைத்து அளிப்பான் என்பது சிந்திக்க வேண்டியது. கடைசிக் குறட்பாவில் அனிச்ச மலரைக் காட்டியது அருமையான இடமாகும். குறட்பாக் களில் அனிச்சம் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது. 10. இனியவை கூறல் மகிழ்ச்சியினைப் பு ல ப் படு த் து வ த ா ய இனிய சொற்களைக் கூறல். சொற்கள் மிகவும் வன்மை படைத்தவைகளாகும். சொற்களை வகைப்படுத்தி, புறங் கூறாமை, பயனில சொல்லாமை, சொல் வன்மை, அவை யறிதல், அவையஞ்சாமை என்கின்ற அதிகாரங்கள் கூறு