பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சொல்லும், நான்காவது குறட்பாவில் கூறப்படும் ‘துவ்வாமை" என்பதும், ஒன்பதாவது குறட்பாவில் இருக்கும் 'ஈன்றல்' என்ற சொல்லும் சிந்தனைக்குரியவைகளில் சில எனப்படும். 11. செய்ந்நன்றி அறிதல் தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாதிருத்த லாகும். செய்ந்நன்றி மறத்தல் கொடிய செயலாகும். தனக்கு முன் ஒர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறருக்குச் செய்த உதவி அளவிடற்கரியதென்றே கூறப் படும். நன்றி என்பது நன்மை என்று பொருள் படும். செய்ந்நன்றி என்பது செய்த நன்மை என்பதாகும். நன்றி என்பது அறம் என்ற பொருளிலும் கூறப்படுவதாகும். இந்த அதிகாரத்தில், காரணம் இல்லாமல் செய்த உதவி, காலத்தினால் செய்த உதவி, பயன் கருதாமல் செய்த உதவி ஆகிய மூன்றும் அளவிட்டுக் கூற முடியாத சிறப்பு வாய்ந்தவை என்பதனை முதன் மூன்று குறட்பாக் களும் தெளிவுபடுத்துகின்றன. இந்த மூன்று வகையிலும் அல்லாத உதவியினை அறிந்துணர்பவர்களுக்குச் செய்தால் மிகவும் பெரிதாக எண்ணப்படும் என்பதனை நான்கு, ஐந்து ஆகிய இரு குறட்பாக்களும் கூறுகின்றன. ஆறு, ஏழு பாக்கள் நன்றி செய்தவரது நட்பினை விடலாகாது என்று குறிக்கின்றன. ஒருவன் செய்த நன்மை யினை மறக்கவே கூடாதென்றும் அவன் செய்த தீமையினை மறக்க வேண்டும் என்றும் எட்டாவது பாடல் கூறுகின்றது. நன்மையல்லாததை ஒருவன் செய்தால் அதனை எவ்வாறு மறக்க வேண்டும் என்னும் வழியினை ஒன்பதாவது பாடலும், செய்ந் நன்றி கொல்லுதல் மிகவும் கொடுமை யானது என்பதனைப் பத்தாவது பாடலும் கூறுகின்றன. வையகம், வானகம், ஞாலம், கடல், தினை, பனை, எழுமை எழுபிறப்பு, என்பவைகள் குறித்துக் காட்டும்