பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : அந்நன்றியினை நினைத்து நடுவு நிலைமையிலிருந்து பிறழக் கூடாது என்பதும் கருத்தாகும். முதற் குறட்பா நடுவு நிலைமையின் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. இரண்டாம்-மூன்றாம் குறட் பாக்கள் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயக்கும் என்பதனையும், மற்றைய வழியில் வந்த செல்வம் தீமையினைப் பயக்கும் என்பதனையும் குறிக் கின்றன. நடுவு நிலைமை உள்ளவர், இல்லாதவர் என்பதனை அறியும் வழியினை நான்காம் குறட்பா எடுத்துக் காட்டுகின்றது. ஐந்து முதல் எழாவது பாடல்வரை, நெஞ்சத்தில் நடுவு நிலையை குன்றrதிருத்தலே சான்றோர்க்கு அழகு என்றும், குன்றுதல்-கோணுதல்-கேட்டிற்குக் காரணம் என்றம், டுவு நிலையைான் வாழ்வில் தாழ்வுற்றாலும் உலகம் அவலு:டைய தாழ்த்த வறுமையினைக் கெடுதியாக நினைக்காது என்றும் கூறுகின்றன. எட்டு ஒன்பது பாடல்கள் தீர்ப்புக் கூறுவார் நடுவு நிலைமையில் iயந்திருக்க வேண்டும் என்பதனையும் பத்தாம் பாடல் வாணிகம் செய்பவர்கள் நடந்து கொள்ள வேண்டிய தையும் விளக்குகின்றன. செல்வப் பெருக்கமும், கேடும் ஒருவற்கு இயற்கை அமைப்பால் அமைந்துவிட்டதாகும். அதனையே பழவினை யென்றும், 2ளழ் என்றும் கூறுவர். ஆதலால் செல்வப் பெருக்கம், கேடு என்பதனைக் காரணமாகக் கொண்டு நடுவு நிலைமையிலிருந்து வழுவுதல் கூடாது என்பதனை ஐந்தாம் குறட்பா விளக்குகிறது. ஊழ் என்ற அதிகாரத்தில், "இயற்கை என்று கூறி தெளிவுபடுத்தும் முறை சிந்திக்கத் தக்கது. நான்காவது குறட்பாவில் கூறப்படும் எச்சம்' என்பது எஞ்சி நிற்கும் நிலைமை என்பதனைக் குறிக்கும். மக்கள்'