பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 14. ஒழுக்கம் உடைமை மனிதப் பிறவிக்கேற்ப மனிதத் தன்மையுடன் கடமை யுணர்ந்து நடந்து கொள்ளுதலாகும். ஒழுக்க நெறியே உயிரினை விடவும் மேம்பட்டதாகப் பாதுகாக்கப்பட வேண்டும். முதற் கு ற ட் பா வி ேல .ே ய, ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பினைத் தருவதால் அவ்வொழுக்கம் உயிரினைவிட மேலானதாகப் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது. இரண்டாவது பாடலும் ஒழுக்கத்தின் சிறப் யினையே கூறுகின்றது. மூன்று முதல் ஏழு பாடல்கள் ஒழுக்கமுடைமையால் ஒருவன் அடையும் மேம்பாட்டினையும் அது இல்லாவிட்டால் உ ண் டா கு ம் இழிநிலையினையும் விளக்குகின்றன. ஒழுக்கத்தின் வரும் பின் விளைவினை எட்டாவது பாடல் எடுத்துக் காட்டுகிறது. சொல்லாலும் செயலாலும் வரும் ஒழுக்கங்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கடைசி இரண்டு பாடல்களும் குறிப்பிடுகின்றன. "கூடாவொழுக்கம்' என்றொரு அதிகாரம் துறவற இயலில் கூறப்படுகிறது. மக்களை வஞ்சிக்கும் போலி வேட தாரிகளைத் தெளிவுபடுத்தும் அதிகாரமாகும். கடைசியாக வைக்கப்பட்டுள்ள 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற குறட்பாவுடன், எவ்வது உறைவது உலகம்' என்ற குறட்பாவினையும், செயற்கை அறிந்தக் கடைத்தும்' என்ற குறட்பாவினையும், ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். உயர்ந்த மறை நூலினை ஒத்து' என்று கூறினார். அதனை ஒதிக் கொண்டிருப்பதே மனித ஒழுக்கம் என்று கருதியிருந்தால் தவறு என்றும், அதனை மறந்தாலும் திரும்பப் படித்துக் கொள்ளலாம் ஆனபடியால் பிறப்பு ஒழு க் க ம் குன்றாதிருத்தலே இன்றியமையாததாகும்