பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நிலமாகும். நிலத்தினை அகழ்வாரும், பிறரை இகழ்வாரும் ஒப்பிடப் படுகின்றனர். நிலத்தினை அகழ்வதற்கு தோண்டுவதற்குக் கடுமையான கருவி இருப்பது போலப் பிறரை இகழ்வார்க்கு உள்ளம் இருக்கின்றதென்பது குறிப்பு ஆறாம் குறட்பாவில் கூறப்பட்டுள்ள ஒரு நாளை இன்பம் பொய்யின்பம் என்பதாகும். செருக்கினையே உணர்த்திற்று. ஐந்தாம் குறட்பா "பொன் போல்' என்று கூறுவது அரிய சிந்தனைக்குரியதாகும். சுடச்சுடரும்' *அரம் பொருத வேண்டற்க' என்று தொடங்கப் பெறும் குறட்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பொன்' தரும் விளக்கங்களை அறியலாம். 17. அழுக்காறாமை 'அழுக்காறு" என்பது ஒரு சொல். பிறர் ஆக்கம் செல்வாக்கு - முதலியன கண்டு பொறாமை கொள்ளுத லாகும். அழுக்காறு கொள்ளாதிருக்க வேண்டும் என்பதனை *அழுக்காறாமை" என்னும் சொல் குறித்து நின்றது. *அழுக்காறு' இல்லாதிருப்பது எவ்வளவு மேன்மையான தென்பனை முதலிரண்டு பாடல்கள் கூறுகின்றன. மூன்றாம் பாடல் முதல் எட்டாம் பாடல் வரை பொறாமையுடைமை யினது.பெருங்குற்றம் முறையாகக் கூறப்படுகிறது. ஒன்பது பத்து, பாடல் கெடுதியும், ஆக்கமும் வருவதற்குக் காரண மானவற்றைக் குறிக்கின்றன. - ஒழுக்க நெறிகளாகக் கூறப்பட்டவைகளில் அழுக்காறு இல்லாதிருத்தல் சிறந்ததென்பதை முதற் குறட்பா, ஒழுக்காறாக் கொள்க' என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது. பகைவரிடத்தில்கூட அழுக்காறு இல்லாதிருத்தல் வேண்டும் என்ற உயர்ந்த பண்பினைக் குறிக்கவே இரண்டாம் பாட ஆலில் யார் மாட்டும்’ என்றார். -