பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பொறாமை கொண்ட நெஞ்சத்தான் ஆக்கமுடையவ னாகவும், செம்மையுடையவன் கெடுதியுடையவனாகவும் இருப்பதற்குக் காரணம் பழவினை என்னும் இயற்கையே யாகும். ஒன்பதாவது குறட்பா இதனைக் கூறுகின்றது. 18, வெஃகாமை பிறருடைய பொருளை வஞ்சித்து அபகரிக்க நினையா திருத்தலாகும். பொறாமையுண்டானால் பிறர் பொருளை வெளவக் கருதும் நினைப்பும் உண்டாகும். இதுவும் கொடிய குற்றமாகும். நடுவு நிலைமை என்பது அறவே இல்லாதிருத்தல் இக்குற்றத்திற்கு அடிப்படைக் காரண மாகும். இதனை முதற் பாடல் வற்புறுத்துகின்றது. வெஃகுதல் செய்பவனுடைய குடி அழியும் என்பது எடுத்துக் காட்டப்பட்டது. நடுவு நிலைமை இல்லாதிருத்தல் பெருந் தீமை என்பவர்கள் வெஃகுதலை மிகவும் அஞ்சுவர் என்ப தனை இரண்டாம் குறள் கூறுகின்றது. இக்குறளில் நடுவு' என்ற சொல் சிந்திக்கத் தக்கது. அதாவது ஒருவன் பொருளுக்குப் பிறன் உரியவன் அல்லன் என்பது நடுவு' என்பதாகும். r பாவச் செய்கையினால் வரும் இன்பத்தினைச் சிற்றின்பம் என்று மூன்றாம் குறள் குறிக்கின்றது. ஐம்புலன் களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினையுடையார் களை நான்காம் குறள் விளக்குகின்றது. அறிவின் மேம் பாட்டினை ஐந்தாம் குறள் சிறப்பித்தது. முதல் ஏழு பாடல்களும் வெஃகுதலின் குற்றத்தினைத் தொகுத்துக் கூறின. х - * எட்டு ஒன்பது பாடல்கள் வெஃகாமையின் குணத்தி னைக் குறிப்பிடுகின்றன. வெஃகாமையின் நன்மை தீமை களை ஒருங்கு சேர்த்துக் கடைசிக் குறட்பா குறித்தது. "குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்' - விளைவயின்