பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3() ஒழிப்பது-நீக்குவது என்பதற்கு வழிவகுத்துச் சொல்லு கின்றது. - மூன்றாவது குறட்பாவில் பொதிந்துள்ள கருத்து சிந்தனையை மிகுதியும் தூண்டுவதாக உள்ளது. புறங் கூறி வாழ்வதைவிட சாவதே மேல் என்றும் அது அறத்தினைத் தரும் என்று குறிப்பிட்டுக் கூறுவது பன்முறையும் கருதற் பாலது. புறம் கூறி வாழ்பவனை இந்தப் பூமியும் தாங்குவது கூடாது என்ற எண்ணம் ஒன்பதாவது குறட்பாவில் காணப்: படுகிறது. அறத்தினைக் கருதி இப்பூமி தாங்குகின்றதோ என்ற கருத்து சிந்தனைக்குரியதாகும். R அறம், பொய்த்து நகை, சொல், நட்பு, பொறை, குற்றம்,முதலியன திருக்குறளில் காணப்படும் பிற அதிகாரங். களை நினைவுபடுத்துவனவாகும். புறங் கூறான் என்றல் இனிது’-'அறம் ஆக்கம் தரும்' - தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'- என்பன புறங்கூறாதிருத்தலின் நன்மையினை யும் சிறப்பினையும் காட்டுகின்றன. பிறனில் விழையாமை, அழுக்காறாமை, வெஃகாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, கல்லாமை, சிற்றினஞ் சேராமை, பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை, இடுக்கண் அழியாமை, அவை அஞ்சாமை பெரியாரைப் பிழையாமை, கள்ளுண்ணாமை, பிரிவாற். றாமை முதலிய அதிகாரங்களின் பெயர்களும்- அவைகளின் அமைப்பும், புறங்கூறாமை" என்பது போல் கருதற்பாலன. புறனழீஇப் பொய்த்துநகை-பொய்த்துயிர் வாழ்தல்முன் இன்று பின் நோக்காச் சொல்-புன்மையால் காணப் படும்-திறன் தெரிந்து கூறப்படும்-நட்பாடல் தேற்றாதவர். ஏதிலார் மாட்டு-புன் சொல் உரைப்பான்-தம் குற்றம் காண்கில்-என்பன புறங் கூறி வாழ்பவர்களின் இழி தன்மை பிணையும், தீமையினையும், சுட்டிக் காட்டுகின்றன.