பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நான்காம் குறட்பாவும் வறியவன் என்று எண்ணி தீமை செய்யாதே என்பதனை ஐந்தாம் குறட்பாவும் கூறுகின்றன. பிறருக்குத் தீமை செய்வது தனக்குத் திரும்ப வந்தே தீரும் என்ற உண்மையினை ஆறு, ஏழு கு ற ட் பா க் க ள் குறிக்கின்றன. நிழலினை உவமை காட்டி எட்டாம் குறட்பா கூறுவது மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாகும். ஒன்பதாம் குறட்பா, ஒருவன் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வழியினைக் கூறும். ஆக நான்கு முதல் ஒன்பதாம் குறட்பா வரை, பிறர்க்குத் தீமை செய்பவன்தான் கெடுவது உறுதி என்பதனைக் கூறுகின்றன. கடைசி குறட்பா, தீவினை செய்யாதவன் கெடுதல் இல்லையென்ற மெய் யுரையினை விளக்குகின்றது. அறிவு, அறம், பகை, வினை, முதலிய சொற்கள் பிற அதிகாரங்களை நினைவுபடுத்துவனவாகக் கொள்ளுதல் நன்று. தீவினையார், தீயினும் அஞ்சப்படும், இலன் ஆகும், பின் சென்றிடும், கெடுதல், துன்னற்க என்பன தீவினை எவ்வளவு கொடிது என்றும் அதனைச் செய்வார் துன்பம் உறுதல் உறுதி என்றும் குறிப்பிட்டன. 22. ஒப்புரவு அறிதல் அதாவது உலக நடையினை அறிந்து செய்தல் என்ப தாகும். அறநூல்களுள் கூறப்படுவது மட்டுமல்லாமல் தானே அறிந்து செய்யும் தன்மையுடையது ஆனபடியால், ஒப்புரவு அறிதல் என்றார். செய்யவேண்டிய நற்செயல் களுள் ஒப்புரவு அறிதலும் ஒன்றாகும். முதற் குறட்பா மேகங்களை ஒப்பிட்டுக் கூறுகின்றது. நீர் உதவும் மேகங்கள் உயிர்களிடத்தில் கைம்மாறு: என்பதனை எதிர்பார்ப்பதில்லை. அதுவே போல மேகங்கள் போன்றவர்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்கு.