பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வனவல்ல என்பதாகும். தவிர்க்காமல் நன்மை செய்வது உறுதியானபடியால் கடப்பாடு" என்று கூறப்பட்டது. அழகுற அமைந்தது முதற் குறட்பாவாகும். தேடிய பொருட் செல்வம் ஒப்புரவு செய்தற்கே பயன்படவேண்டும் என்னும் .க ரு த் து இரண்டாம் குறட்பாவில் காணப்படுகிறது. பொருளினை முயற்சி செய்து ஈட்டவேண்டுமென்றும், தக்கார்க்கு அளிக்கவேண்டுமென்றும் கூறினார். தேவருலகத்தினையும் இவ்வுலகத்தினையும் ஒப்பிட்டுக் காட்டி ஒப்புரவின் மேம்பாட்டினை மூன்றாம் குறட்பா விளக்குகின்றது. ஆக முதன் மூன்று குறட்பாக்களும் .ஒப்புரவினது பெருஞ்சிறப்பினை விளக்குகின்றன. நான்காம் குறட்பாவில், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்" என்று கூறியது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். ஊருணி - பயன் மரம்' - மருந்து மரம்' - ஆகிய வற்றை உவமையாகக் கூறி ஒப்புரவு அறித லின் உயர்வான சிறப்பினை முறையே, ஐந்து ஆறு ஏழு குறட்பாக்கள் தெளிவு படுத்துகின்றன. இந்த மூன்றும், கடமையறிந்த ஒப்புரவறி பவனுடைய செல்வம் எவ்வாறு பிறருக்குப் பயன்படும். என்பதைக் கூறுகின்றன. செல்வம் சுருங்கிய போதும் ஒப்புரவு அறிபவர்கள் தளரமாட்டார்கள் என்பதனை எட்டாம் பாடலும், வறுமையாலும் ஒப்புரவு நீக்கற்பாலது அன்று என்பதனை ஒன்பதாம் பாடலும் கூறுகின்றன. பத்தாம் பாடல், ஒப்புரவினால் கெடுதிவந்ததாகச் சொன் னாலும், அது கேடு ஆகாது என்று கூறுகின்றது. இந்த அதிகாரத்தில் மிக அருமையான உவமைகள் காணப்படு .கின்றன. - - - மாரி (மேகம்), ஊருணி, பயன் மரம், மருந்து மரம் முதலியனவற்றைக் காட்டிய சிறப்பு பன்முறையும் சிந்திக்கத்தக்கதாகும். உயிர் வாழ்வான், பேரறிவாளன், நயன் உடையான், பெருந்தகையாளன், கடன் அறி காட்சியவர், என்பன ஒப்புரவு செய்யும் மேன்மையாளனின்