பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அரிய பெருமையினைக் குறித்து நின்றன. "என் ஆற்றுங் கொல்லோ - "தக்கார்க்கு வேளாண்மை பெறல் அரிதே' க! மற்றையான் - நீர் நிறைந்தற்றே - பழுத்தற்றால்.தப்பா மருந்தற்றால் . ஒப்புரவிற்கு ஒல்கார் நல்கூர்ந்தான் ஆதல் - விற்றுக் கோள் தக்கது - என்பவை யெல்லாம் நினைவில் நிறுத்தி கருத்தறிய உதவுகின்றனவாகும். மாரி, பொருள், தாள், அறிவான், மருந்து, நல்கூர்ந்தான் என்பன பிற அதிகாரங்களைக் குறித்து நின்று விளக்கம் செய்வனவாகும். தேவருலகத்திலும் ஒப்புரவுபோல நல்லன. வற்றைக் காணுதல் அரிது என்று மூன்றாம் குறட்பா சுட்டிக் காட்டுகிறது. ஒப்புரவு அறியாதவர்கள் உலகில் வாழ்பவர் களாகவே கருதமாட்டார்கள் என்று சுட்டிக் காட்டிற்று, நான்காம் குறட்டிா. தன்னை விற்றுக்கொள்ளப்படுவதொரு பொருள் இல்லையென்றாலும், புகழ் பயத்தல் நோக்கி அதுவும் செய்யப்படும் என்று பத்தாம் குறட்பா உயர்த்திக் கூறிற்று. உளவரை தூக்காத ஒப்புரவாண்மை' என்பது போன்ற குறட்பாக்கள் சிந்தனைக்குரியன. இந்த அதிகாரம், அறிதல்' என்று முடிவதுபோல, செய்ந் நன்றியறிதல், வலியறிதல், காலம் அறிதல், இடனறிதல், குறிப்பறிதல் (இரண்டு அதிகாரங்கள்) அவையறிதல் முதலிய அதிகாரங்களும் முடிகின்றன. 23. ஈகை வறியவர்களாக வந்துகேட்போர்க்குக் கொடுத்தலாகும். வறுமையாளர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுப்பது சகையாகாது. உடைமை அச்சம் அறிதல் போன்ற அடைமொழிகள் இல்லாமல் சொல்லப்பட்டுள்ள அதிகாரங் களி ல், இதுவும் ஒன்றாகும். இல்லறத்தார்களே ஈகை செய்தற்கு உரியவர்களாவர்.