பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36, ஈகை என்பதன் விளக்கத்தினை முதற்குறட்பா தெளிவு: படுத்துகிறது. அதாவது சகையின் இலக்கணம் கூறப்பட்ட தாகும். மேல் உலகத்தினைக் காட்டி ஈகையின் பெருஞ்: சிறப்பினை இரண்டாவது குறட்பா குறிக்கின்றது. ஈகை செய்யவேண்டிய முறையினை மூன்றாம் குறட்பா விளக்கு கின்றது. ஈதலின் இனிமையினை நான்காம் குறட்பா கூறும். தவசிகளை எடுத்துக்காட்டி ஈதலின் பெருமை விளக்கப் பட்டுள்ள தன்மை, ஐந்தாம் குறட்பாவில் காணப்படுகிறது. பொருள் வைக்கும் இடம், தீப்பிணி தீண்டாததற்கு வழி ஆகியவற்றை முறையே ஆறு, ஏழு குறட்பாக்கள் சுட்டிக், காட்டுகின்றன. எனவே இரண்டு முதல் ஏழு குறட்பாக்கள் ஈதலின் சிறப்பினை மிகவும் தெளிவாகக் கூறுகின்றன. எட்டு, ஒன்பது, பத்து, ஆகிய மூன்று பாடல்களும் ஈயாமையின் குற்றத்தினைக் குறிப்பிடுகின்றன. - மேல் உலகம் இல் எனினும் - குலம் உடையான் இன்னாது இரக்கப்படுதல் - மாற்றுவார் ஆற்றிலின் பின் . பொருள் வைப்புழி - தீண்டல் அரிது - ஈத்துவக்கும் இன்பம்என்று கூறியவைகள் ஈகையினால் பெறுகின்ற நற்பயனையும் அதன் சிறப்பினையும் நன்மையினையும் கூறுகின்றன. வறியார், குலன் உடையான், இரந்தவர், ஆற்றுவார். பொருள், அறியார், என்பன குறித்துணர்த்தும் அதிகாரங் களைக் கண்டு தெளிதல் பயனுடையதாகும். வந்தவர்களுக் கெல்லாம் கொடுப்பது ஈகையாகாது என்பதனைத் தெளிவு படு த் து வ து முதற்குறட்பாவாகும். வறியவர்களுக்கே கொடுத்தல் வேண்டும். ஈகை என்பதற்கு, உலகவழக்கில் கூறப்படும் தருமம்' என்ற சொல்லினைக் கூறலாம். ஆனால் திருக்குறளில் அச்சொல் இல்லை. அறம்' என்பது வேறு. நன்மை, தீமை இரண்டினையும் கூறிய இரண்டாவது குறட்பா, இவ்வுலக வாழ்க்கையின் கடமையினையே அறிவுறுத்தி நின்றது. பசி ஆற்றல்' எத்தகைய மேன் மை