பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கூறப்படும். அதனை அவ்வுலகம்' என்று ஏழாம் குறட்பா கூறு கின்றது.பொருள் -செல்வம் கொண்டு ஆசைவைத்து வாழ் கின்றதன்மையுடையதை இவ்வுலகம்' என்று அதேகுறட்பா கூறும். அருள் வழியில் செல்லுபவர்கள் உறுதியாக இருக்க வேண்டியதை எட்டாம் குறட்பா வலியுறுத்தும். - . மெய்நூல் களாகக் கூறப்படும் பற்பல நூல்களின் விளக் கங்களைக்கண்டுவிரிவாக அறிந்துணர்தல்வேண்டும். ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளினை உணர முடியாது. அவன் மெய்ப் பொருளினை உணர்ந்தான் என்று கூறுவது தவறாகும்; அறியாமையாகும். ஆதலால்தான், ஒன்பதாம் குறட்பா கண்டாற்றால்' என்று கூறுகிறது. அருள் இல்லா தவன்.அறம் செய்தல் இயலாது. - - அறத்திற்கு அடிப்படை அருள். மனத்தில் அன்பு, அருள், இரக்கம், கருணை என்றெல்லாம் பற்பல வாக விளக்கிக் கூறப்படுவது இருத்தல் வேண்டும். உள்ளத் தில் அருள் இல்லாதவன் அறம் செய்வதாகத் தோன்றினா லும் அது பயனற்றது. “மனத்துக் கண் மாசிலன்' என்ற குறட்பா சிந்தனைக்குரியது. புலால் மறுத்தல்" என்பது சிறந்த அறம். அது ஒரு நோன்பு. அதனையும் மனதில் கருணை, அருள் நிரம்பியவன்ே செய்தல் வேண்டும். அவ்வருள் இல்லாதவன் அந்த அறத்தினைச் செய்கின்றான் என்பது பயனற்றது என்பதை எடுத்துக் காட்டாகக் கொள் ளுதல் வேண்டும். - , or அருள் நெறியில் நிற்கும் பேரின்ப பெரியோர்களின் பண்பு பத்தாம் குறட்பாவில் கூறப்படுகிறது. துறவற நிலை அத்தகைய மேன்மையுடையதாகும். வலியார்க்கு மாறு ஏற்றல் ஒம்புக" என்ற குறட்பாவினை ஒப்பிட்டால் வேறு பாடு தெளிவுறத் தோன்றுய். பத்தாம் குறட்ப்ாவில், 'தன்னை நினைக்க என்பது சிந்தனைக் குரியது.