பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அஞ்ஞானம் நீங்கியவர்கள் செய்யார் - என்று எட்டாம் குறட்பா குறிக்கின்றது. வேள்வி செய்பவர்களைக் கண்டித்து, கொலை செய்து உண்ணாதிருக்க வேண்டும் என்பதனை ஒன்பதாம் குறட் பா வலியுறுத்தும். ஆயிரம் வேட்டல்' என்று குறிப்பிட்ட தால் இத்தகைய வேள்வி மிகவும் கொடுமையானது என்பது பெறப்பட்டது. அவி' என்பது யாகத்தில் தேவர்களுக்கு இடப்படும் உணவு. எல்லா உயிர்களும் தொழும் என்று பத்தாம் குறட்பா கூறுகின்றது. கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்பதால் கொலைப்பாவம் எத்தகைய கொடுமை என்பது உணர்த்தப்பட்டது. ‘விருந்தோம்பல்' என்ற அதிகாரத்தில் கூறப்படும் வேள்வி' என்பதனைச் சிந்தித்தறிதல் வேண்டும். பொருள் செயல் வகை கொல்லாமை முதலிய அதிகாரங்களும் படை' பற்றிக் கூறும் அதிகாரங்களும் நினைவு கொள்ளுதற்குரியன. எங்ங்ணம் ஆளும் அருள். அருளாட்சி ஆங்கில்லை. நன்று ஊக்காது . அவ்வூன்தினல் - உள்ளது உயிர்நிலை - புண் அது உணர்வார் . உண்ணாமை நன்று கைகூப்பி - என்று குறிக்கப்பட்டவைகளை நினைவில் நிறுத்தி இவ்வதிகாரத் தின் நுண் பொருளினை அறிந்து கொள்க. 27. தவம் மனம் பொறி வழிகளில் செல்லாதிருக்கும் பொருட்டு நோன்புகளால், உண்டி சுருங்குதல், வெயில், மழை, பனி இவைகளைப் பொருட்படுத்தாதிருத்தல் முதலியனசெய்தல். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகும். பிற உயிர் களைக் காத்தலாகும். அருள் மிகுந்து செய்தலாகும்.