பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தவத்தினது இலக்கணம் முதற் குறட்பாவில் தெளிவாகக் கூறப்பட்டது. தவத்திற்கு உருவம் இன்ன தென்று விளக்கப்பட்டது. இரண்டுமுதல் ஐந்து குறட் பாக்கள் தவத்தின் மேலான சிறப்பினைக் கூறுகின்றன. ஆறு முதல் ஒன்பது வரை உள்ள குறட்பாக்கள் தவம் செய் வாரது உயர்ச்சியினைக் கூறுகின்றன. தவத்தார்களாகப் பலர் இல்லாதிருப்பதற்குக் காரணம் கடுமையான நோன்பு களை நோற்பவர்கள் சிலரே இருப்பதாகும் என்பது குறித் துணர்த்தப்பட்டது. தவம் செய்வார்க்கு மிகுதியும் துன்பம் வரச்செய்யும் என்றும் அதனைப் பொறுத்தல் வேண்டும் என்பதனையும் முதற்குறட்பா விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது. எல்லோருமே தவம் செய்துவிட முடியாதென்றும் 呜必茄 கென்றே பிற வி உண்டு என்பதனையும் இரண்டாம் குறட்பா கூறுகின்றது. இரண்டாம் குறட்பாவும் பத்தாம் குறட்பாவும் ஒரு சேர எண்ணிப் பார்ப்பதற் குரியனவாகும். இல்லறத்தார் துறவிகட்கு ஆதரவாக இருத்தல் வேண்டு மென்பது மூன்றாம் குறட்பாவின் கருத்தாகும். இல்லறத் தார்க்குத் தானமும், தவசிகட்குத் தவமும் ஏற்ற தென்ப தாகும். - தவத்தின் ஆற்றல் நான்காம் குறட்பாவில் கூறப்பட்டது. பகைவரை அழித்தல் என்பது தவத்தார்க்கு இயல்பான பண்பல்ல என்பதால், இக்குறட்பாவில் எண்ணின்' என்பது கூறப்பட்டது. ஐந்தாம் குறட்பாவும் தவத்தின் சிறப்பினை உணர்த்திற்று. தவம் என்பது பிறப்பு, பிணி முதலியவற்றால் துன்பம் எய்திநின்ற உயிர் குானம் பெற்று வீடுபேறடைவ தால் 'தம் கருமம் செய்வார் என்று ஆறாவது குறட்பா குறிப்பிடு கிறது. இதன் விளக்கங்களை மெய்ந்நூல்கள் பலவற்றுள்ளும் கண்டு தெளிதல் வேண்டும்.