பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒழுக்கமின்மையினை, இந்த அதிகாரம் எடுத்துரைக். கின்றது. . .’ வஞ்சனையால் தீய ஒழுக்கம் செய்பவனைப் பார்த்து அவனுள் இருக்கும் ஐந்து பூதங்களும் சிரிக்கும் என்று முதற். குறட்பா கூறுகின்றது. நிலம், நீர், தீ, காற்று, விண் ஐந்தும். உலக இயற்கையின் பாகுபாடுகளாகும். இந்த ஐந்தும். உடம்பினுள்ளும் இருக்கின்றன. ஆதலால் அவைகள் இவனைப் பார்த்து சிரிக்கும் என்றார். மறைவாகச் செய்வ: தென்று நினைக்காதே’ என்று இடித்துரைத்து உண்மை உணர்த்தப்பட்டது. இரண்டாம் குறட்பாவும் தன்னுடைய நெஞ்சம் அறி கின்ற குற்றம் செய்வதினைக் கண்டித்துக் கூறுகின்றது. உயர்ந்த தவவேடத்தினால் பயனில்லை என்பதனை இக். குறட்பா எடுத்துக் காட்டுகிறது. தோற்றத்தினால் மக்கள் ஏமாற்றப்படுவர் என்பதனைக் காட்டவே, தோற்றம்’ என்று கூறப்பட்டது. மூன்றாம் குறட்பா வெளிப்படையான நல்ல உவமையால் கூடாவொழுக்கத்தினரைக் காட்டுகிறது. புலியின் தோல் போர்த்து அயலான் தோட்டத்தில். மேய்கின்ற பசுவினைத் தவவேடம் போட்டு வஞ்சிப். பவர்களுக்கு உதாரணமாக இக்குறட்பா விளக்குகிறது. நான்காம் குறட்பா, தவவேடம் தாங்கி மகளிரை ஏமாற்றும் வஞ்சகர்களைப் புதரில் மறைந்து பறவைகளைக் கொல்லும் வேடனுக்கு உவமையாகக் காட்டுகிறது. கொடுமையிலும் கொடுமை என்று இச்செயல் உணர்த்து கின்றது. வேடன் புதரில் மறைந்திருக்கின்றான். கூடா ஒழுக்கத்தான் தவவேடத்தில் மறைந்திருக்கின்றான். புதர் வேடனை மறைக்கின்றது. வேடம் வஞ்சகனை.அவன் தீய உள்ளத்தினை மறைக்கின்றது. மனத்தால் ஆசைகளைத் துறந்தவர்களுக்கு வேடமே தேவையில்லை என்பது குறிப் ம். இத்தகையவஞ்சகச் செயல் அவர்கட்குப் பற்பல