பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கள்வர் கெடுவது உறுதி என்பதனை ஒன்பதாம் பாடலும் கள்வாரும் கள்ளாரும் அடையும் பயன்களைப் பத்தாம் . பாடலும் கூறுகின்றன. முதற்குறளில் எள்ளாமை. வேண்டுவான்' என்பதற்குப் பேரின்பு வீட்டினை இகழ்வான் என்று கொண்டு அதற்கு மாறான தீய எண்ணங்களை •பேரின்ப நிலைக்கு பொருந்தாத நி ைன வு களை , கொள்ளுபவன் என்பதாகும். துறவிகள் ஆனபடியால் உள்ளலும் நினைத்தலும், தீது என்று இரண்டாம் குறட்பா கூறுகின்றது. ஆவது போலக் கெடும்' என்று மூன்றாம். குறட்பா குறிப்பது சிந்தனைக்குரியது. வீயா விழுமம் தரும்’ என்று கள்வார் அடையும் பெருந் துன்பத்தினை நான்காம் குறட்பா கூறுகிறது. - அருளாளர்களுக்கு இச்செயல் ஒவ்வாது என்பது ஐந்தாம் பாடலின் கருத்தாகும். அளவின் கண் நின்று ஒழுகுபவர்" துறவிகள் என்று ஆறாம் பர்டல் கூறும். களவென்பதனைக் காரறிவு" என்று ஏழாம் பாடல் சுட்டிக் காட்டுகிறது. கள்வார்க்கு, கரவு இயல்பானதென்று எட்டாம் பாடல் குறிக்கின்றது, அத்தீய நினைவு நினைத்தபோதே கெடுக்கும். என்று ஒன்பதாம் பாடல் சுட்டுகிறது. கள்ளார்க்குப்புத்தேள் உலகும் கிடைக்கும் என்று பத்தாம் படா ட ல் விளக்கம் , தருகிறது. பொருள், காதல், அருள், அன்புடையர், பொச்சாப்பு, பார்ப்பார், ஒழுகல், அறிவு, ஆண்மை, அறம், முதலியன பிற அதிகாரங்களை நினைவு படுத்த உதவுவதாகக் காணப். படுகின்றன.