பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 30. வாய்மை உண்மை, மெய்மையென்பதன் த ன் ைம ய ர கு ம். முதலிரண்டு பாக்களும் வாய்மையின் இலக்கணம் இன்ன தென்றுகூறுகின்றன. இவை இரண்டும்,தீமை உண்டாக்காத தாக இருந்தால் நடந்ததைக் கூறுவதும், நன்மை தருவதாக இருந்தால் நடக்காததைக் கூறுதலும் மெய்மை என்று விளக்குகின்றன. அதுவே போன்று, நன்மையினைத் தராத, நடக்காததைக் கூறலும் தீமையினைத் தரும் நடந்ததைக் கூறலும் பொய்மை என்றும் விளக்கம் தருகின்றன. பொய் மறைக்க முடியாதது ஆனபடியால் அது கூறலாகாது என்று மூன்றாம் பாடல் கூறுகின்றது. இம்மைப் பயன் பெறுவது உறு தி என்பதனை நான்காம் பாடல் அறிவுறுத்துகின்றது. ஐந்து, ஆறு, ஏழு பாடல்கள் பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தரும் ஆற்றல் உடையது வாய்மை என்று கூறுகின்றன. கடைசி மூன்று குறட்பாக் களும் வாய்மை தலைமையான தென்பதைத் தெளிவுபடுத்து கின்றன. ஆறாவது பாடலில் காணப்படும், எல்லா அறமும் தரும்' என்பதும், நான்காம் பாடலில் காணப்படும் :உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்' என்பதும் வாய்மையின் சிறப்பினை மிகவும் தெளிவுற எடுத்துக் காட்டு கின்றன. பொய்ச் சொற்களும் வாய்மையெனப்படும் என்று இரண்டாவது குறட்பா கூறுகின்றது. அதாவது குற்றமற்ற நன்மையினைச் செய்யுமானால் பொய்மையும் வாய்மை யாகும் என்ற கருத்து குறிக்கப்பட்டது. இதனால் பொய் வாய்மையாகிவிடும் என்பது அல்ல; வாய்மை இடத்த என்று கூறியது சிந்தனைக் குரியதாகும். நன்மையினை அந்த நேரத்தில் கொடுப்பதால் வாய்மையின் தன்மையினுக்கு ஒப்பாகக் கருதப் படும் என்பதேயாகும். தானத்தினையும் தவத்தினையும் ஒன்று சேர செய் வாரினும் சிறப்புடையவன் என்று ஐந்தாம் பாடல் குறித்துக்