பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 3 * செய்யும் ஆற்றல் பெற்றிருப்பார்களானபடியால் அவர்கள் இன்னா செய்வதை மனத்தினாலும் நினைத்தலே கூடாது என்கின்ற கருத்தினை இவ்வதிகாரம் விளக்குகின்றது. தவத்தினால் பல செல்வங்களைப் பெறுதல் கூடும். தவ வலிமையால், பிறர்க்குத் துன்பம் செய்து செல்வம் பெறுதலும் உண்டு என்பதனைக் குறிப்பாக, முதற்குறட்பா உணர்த்துகின்றது. தமக்கொரு பயன் கருதிசெய்தல் கூடாது என்பதனை முதல் பாடல் குறித்தது. இரண்டு, மூன்று, நான்கு ஆகிய பாடல்கள் சினம் பற்றிச் செய்தல் விலக்கவேண்டும் என்பதனை விளக்கம் செய்கின்றன. ஐந்தாம் பாடல் அறிவுச் சோர்வினால் இன்னாதவற்றைச் செய்தல் கூடாது என்று குறிப்பிடுகிறது. ஆறு, ஏழு, எட்டு ஆகிய மூன்று பாடல்களும் பொது வகையான் இன்னாதவற்றைச் செய்தல் கூடாது என்று கூறுகின்றன. கடைசி இரண்டு பாடல்களும் இன்னாதனவற்றைச் செய்பவர்களுக்கு வரும் தீமையினைப் புலப்படுத்துகின்றன. முதலிரண்டு பாடல்களும், "மாசற்றார் கோள்” என்று முடிந்து அருளாளர்களின் உயர்ந்த பண்பினைச் சுட்டிக் காட்டின. பிறர் தமக்குத் தீமையினைச் செய்தாலும் அவர் கட்கு நன்மை புரிவதே அருளாளர்களாகிய துறவிகளுக்கு ஏற்றதென்று மூன்றாம் . நான்காம் பாடல்கள் கூறும். தவ வலிமையினால் பிறருக்குத் துன்பம் செய்யும் மனத்தின் தன்மையினை அடக்குதல் வேண்டும் என்பதே இவ்வதி காரத்தின் அடிப்படைக் கருத்தாகும். தன் உயிர்க்குத் துன்பம் வாராமல் காத்தலே தவத்தார்க்குச் சிறப்பு என்று கூறி எட்டாம் பாடல் உண்மையினைப் புலப்படுத்தும். அ. வி. -4