பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 33. கொல்லாமை எவ்வுயிரையும் கொல்லாதிருத்தலாகும். ஐ ய றி வு உடையன முதல் ஒர் அறிவு உடையன வரை எவ்வுயிரையும் கொல்லாத அறத்தினைக் கூறுகின்றது. துறவற இயலில், நோன்பு என்று கூறப்படும் ஒன்பது அதிகாரங்களில் இது கடைசி அதிகாரமாகும். இதற்குப் பிறகு கூறப்படும் நான்கு அதிகாரங்களும், துறவறப் பகுதியில், ஞானம்' என்ற தலைப்பில் அடங்கும். முதல் மூன்று பாடல்களும் கொல்லாமை என்ற அறத்தின் சிறப்பினைக் கூறுகின்றன. நான்காம் பாடல் தவ நெறி இன்னதென்பதனைக் குறித்துக் காட்டுகிறது. ஐந்தாம் பாடல்,கொல்லாமை என்ற அறத்தினை மறவாதவனுடைய உயர்ச்சியினைப் புலப்படுத்துகிறது. ஆறாம் பாடல் அவர்க்கு வரும் நன்மையினை எடுத்துக் காட்டுகிறது. ஏழு, எட்டு பாடல்கள் கொலையினது குற்றத்தினை எடுத்துக் காட்டு கின்றன. ஒன்பதாம் பத்தாம் பாடல்கள் கொல்வார்க்கு வரும் தீங்கினைக் குறிப்பிடுகின்றன. கொலைத் தொழில் புரிந்த வர்கள் தொழுநோய் அடைவார்களாவார்கள் என்று பத்தாம் பாடல் சுட்டிக் காட்டுகிறது. அறவினை என்பது கொல்லாமையேயாகும் என்ற குறிப்பு முதற்பாடலில் கூறப்படுகிறது. பல்லுயிரினையும் ஒம்புதல் வேண்டும் என்று இரண்டாம் பாடல் கூறுகிறது. மூன்றாம் குறட்பா கொல்லாமையினையும், பொய்யாமையினையும் இணைத்துப் பேசுகின்றது. யாது ஒன்றும் கொல்லாமை' என்று நான்காம் பாடல் கூறி, அருளாளர்களின் உயர்ந்த நிலையினைக் குறிப்பிடுகிறது. துறந்தார்களுக்கு இருக்க வேண்டிய மனோநிலை ஏழாம் பாடலால் அறிவிக்கப் படுகிறது. வேள்வியின் பொருட்டுப்பிற உயிர்களைக்