பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கொல்லுதலும் கூடாது என்பதனைக் குறிப்பால் உணர்த்து கிறது, எட்டாம் குறட்பா. ஆதலால்தான் ஆக்கம் பெரி தெனினும்' என்று எட்டாம் பாடலில் கூறப்பட்டது. 34. நிலையாமை தோற்றம் உடையன யாவும் நிலையாத தன்மை உடையனவாகும். நிலையானவற்றையும் நிலையில்லாத வற்றையும் முதலில் அறிந்துணர வேண்டிய கடமையுடைய வர்களே துறவிகளாவர். அவர்களே பேரின்பநிலை யெனப் படும் வீடு பேற்றினை எய்துவர். நிலையாத் தன்மையினை உணர்ந்த பின்னரே பொருள்களின் பற்று நீங்கும். இந்த அதிகாரத்தில் கூறப்படும் குறட்பாக்களின் ஆழ்ந்த உண்ம்ை கள் பேரின்ப நிலையினை விரித்துக் கூறும். நூல்களைக் கொண்டு விளக்கமாகத் தெரிந்து தெளிதல் வேண்டும். தோற்றம் உடையனவற்றைக் கேடில்லாதவைகள் என்னும் புல்லறிவால் அவைகளின் மீது பற்று உண்டாகும், பற்றுச் செய்தல் பிற வித்துன்பத்திற்குக் காரணமாகும். அது பேரின்பம்-நிலையான இன்பம்.என்னும் வீடு எய்துவார்க்குக் குற்றமாகும் என்கின்ற உண்மையினை முதற்குறட்பா எடுத்துரைக்கின்றது. இரண்டாம் மூன்றாம் பாடல்கள் செல்வம் நிலையாமை யினைக் கூறுகின்றன. நான்கு முதல் பத்தாம் பாடல் வரை, முறையே உடம்புக்கு விதிக்கப்பட்ட நாள் குறைகின்ற முறையினையும், நாட்கள் கழிந்த பின் உளதாகிய நிலையா மையினையும், அவை ஒரோவழிப்பிறந்த அளவிலே, இறத்த லும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமை யும், உயிர் நீங்கியபின் கிடக்கும் நிலைமையும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வரும் தன்மையும், உயிர்க்கு நிலையான இடம் இல்லையென்பதும் கூறப்பட்டன.