பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஏழாம் குறட்பா விளக்கம் தருகின்றது. நிலையாமை துறவு ஆகிய இரு தன்மைகளும், பற்று அறுதல் அறாதிருத்தல் ஆகியவைகளும் எட்டு ஒன்பது பாக்களில் கூறப்படுகின்றன. பற்றினை எவ்வாறு விடுதல் வேண்டும் என்னும் வழியினை பத்தாம் பாடல் கூறுகின்றது. ஆறாவது குறட்பா வானோர்க்கு உயர்ந்த உலகம்" என்று குறிப்பிடுகிறது. சிந்தனைக்குரியது. பேரின்பம் என்கின்ற வீட்டுலகத்தினைக் குறிப்பதாகும். அது முற்றுந் து ற ந் த முனிவர்களே அடையக்கூடிய இன்பமாகும். இடமாகும். தேவருலகம், வானுலகம் என்றெல்லாம் பல திறப்பட்ட பெயர்களால் அழைக்கப்படும் விண்ணுலகம் என்று கூறப்படுவதற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது தெளிவாக்கப்பட்டது. அதுவேயன்றி, வானோர்கள் என்று பேசப்படுபவர் களுக்கும் பற்றற்ற துறவிகளுக்கும் தொடர்பில்லை என்பதும் குறிக்கப்பட்டது. இம்மையில்-இவ்வுலகில்வாழ்ந்து கொண்டு இன்பம் நுகர்ந்து இருப்பவர்களைவிட அதிக இன்பத்தில் வாழ்பவர்கள் தேவர்கள் என்பது மக்க ளிடையே கூறப்பட்டுள்ள கருத்தெனத் தெளிக, பற்றினை வைத்துக் கொண்டிருப்பதால் பிறவித்துன்பம் நீங்காது என்பதனைக் கடைசி நான்கு குறட்பாக்களும் மிகவும் தெளிவாக விளக்குகின்றன. இந்த அதிகாரத்தின் மூன்றாம் குறட்பா, முதல் அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவுடன் ஒப்பிடத்தக்கது. 36. மெய்யுணர்தல் பிறப்பு, வீடு என்பனவற்றையும் அதன் காரணங் களையும் யாதொரு ஐ ய மும் இல்லாமல் உண்மையாக உணர்தலைக் கூறுவதாகும். முதற்குறட்பா பிறப்பு, துன்பம் என்பவைகளைப் பற்றியும் அதற்கு முதற்காரணம் அஞ்ஞானம் என்பதையும் கூறுகின்றது. இரண்டாவது