பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குறட்பா குறிப்பிட்டுக் காட்டுகிறது. அவா அறுத்தலின் சிறப்பினை ஏழாம் குறட்பா தெளிவுபடுத்துகிறது. அவாவே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்பதனை எட்டாம் குறட்பாவும், அவா அறுத்தவர்கள் வீட்டின் பத்தினை உடம்பொடு எய்துவர் என்பதனை ஒன்பதாம் குறட்பாவும், வீடு என்பது இதுதான் என்பதனையும் அது அவா அறுத்தார்க்கு அப்போதே உண்டாகும் என் பதனைப் பத்தாம் குறட்பாவும் விளக்கம் செய்கின்றன. குறிப்பாக உணர்த்தப்பட்ட குறட்பாக்களின் ஆழ்ந்த விளக்கங்களையெல்லாம், அதற்கென்றே கூறப்பட்ட மெய்ந்நூல்கள் பலவற்றிலும் கண்டு தெளிதல்வேண்டும். 38. ഉണ്ണ உண்மை, இயற்கை என்பன போன்ற சொற்களால் விளக்கப்படுவது ஊழ் என்பதாகும். இதனையே பழவினை என்றும் கூறுவர். செயற்கை என்பது முயற்சி என்று கூறப் படுவதுபோல், இயற்கையால் நடைபெறுவனவற்றை ஊழ் என்று கூறினார். நியதி, ஊழ், பாழ், முறை, உண்மை, தெய்வம், விதி என்பவை ஒரே பொருளினைத் தரும் சொற்களாகும். இந்த அதிகாரத்தின் முதல் ஆறு குறட்பாக்களும் பொருளுக்குக் காரணமான ஊழின் வலிமையினைக் கூறு கின்றன. ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய மூன்று குறட்பாக் சுளும் இன்பதுன்பங்களுக்குக் காரணமான ஊழின் வன்மை யினைக் கூறுகின்றன. கடைசியாகக் கூறப்பட்டுள்ளகுறட்பா, இருவகை ஊழின் வலிமையினையும் பொதுவாகக் குறிப்பிடுகிறது. ஊழினை விட மிகவும் பெரிய வலிமையுடையது பிறிதொன்றும் இ. லை என்பதனையே பத்தாம் குறட்பா வற்புறுத்திக் கூறுகிறது. இயற்கை, செயற்கையென்னும் முயற்சியினை