பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முதற்குறட்பா, அரசனுக்குரிய ஆறு உறுப்புக்களையும் கூறுகின்றது. இவையனைத்தும் பெற்றிருப்பதே அவன் வெற்றிக்குக் காரணம் என்பது கூறப்பட்டது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் அரசனுடைய நற்பண்புகளையும் கடமைகளையும் விளக்குகின்றன. கடைசி ஐந்து குறட்பாக் களும் அரசனுடைய மாட்சியினையும் அதனால் உண்டாகும் பயனையும் குறிக்கின்றனவாகும். முதற் குறட்பாவில் காணப்படும் உறுப்புக்களுக்கெல்லாம் தனித்தனி அதிகாரங் கள் இருக்கின்றன. அவைகள் தெளிவான விளக்கம் தருகின்றன. இரண்டாம் குறட்பாவின்விளக்கத்தினையும் தனித்தனி அதிகாரங்கள் கூறும். இவ்வாறே பிற குறட்பாக்களின் விளக்கங்களையும் கண்டு தெளிக, மன்னனையே இறை" என்று கூறும் எட்டாம் குறட்பா சிந்தனைக்குரியதாகும். ஆட்சி முறையினைக் கூறும் பற்பல நூல்களைக் கொண்டு விரிவான விளக்கங்களை உணர்ந்தறிதல் வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கி இந்த அதிகாரத்தில் காணப் படும் குறட்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன. அரசருள் ஏறு - வேந்தற்கு இயல்பு . மானம் உடையது அரசு - வல்லது அரசு - மீக்கூறும் மன்னன் நிலம் - தான் கண்டனைத்து இவ்வுலகு - இறையென்று வைக்கப்படும் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு வேந்தர்க்கு ஒளி - நீங்கா நிலன் ஆள்பவர்க்கு-என்று கூறப்பட்ட பத்தும், மன்னனின் பெருஞ்சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. 40. கல்வி கற்றற்குரிய நூல்களைக் கற்றலாகும். சிறப்பினை : கருதி அரசியலில் அமைக்கப்பட்டது. அனைவர்க்கும் பொதுவாகக் கூறப்படுவதாகும், அரசன் தனக்கேயன்றி