பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 மக்களுக்கும் உரியவனானபடியால் கல்வி அரசியலில் கூறப் பட்டது என்றும் கூறுதல் வேண்டும். கற்றல் வேண்டும் என்பதும் கற்கப்படும் நூல்களையே கற்றல் வேண்டும் என்பதும் அவற்றைக் கற்கும் நெறியும் கற்றதினால் பயனும் முதற் குறட்பாவில் தெளிவாக்கப்பட்டன. கற்கப்படும் நூல்களுக்குக் கருவியாக அமைந்தவற்றை யும் அவைகளின் இன்றியமையாத் தன்மையும் இரண்டாம் குறட்பாவில் கூறப்பட்டன. விரிவான விளக்கங்களை யெல்லாம் கல்விக்கென்று மட்டும் கூறும் பிற நூல்களில் கண்டறிதல் வேண்டும். மூன்றாவது குறட்பா, பொருள் நூல்களையும் கருவி நூல்களையும் கற்றாரது உயர்ச்சியினையும் கல்லாதாரது இழிநிலையினையும் தொகுத்துக் கூறுகின்றன. கற்றாரது உள்ளப் பாங்கினை நான்காம் குறட்பா எடுத்துரைக் கின்றது. முறையாகக் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் ஐந்தாம் பாடலில் காணப்படுகிறது. கடைசி ஐந்து பாடல்களும் கல்வியினது உயர்வையும் சிறப்பினையும் விளக்கம் செய்கின்றன. கற்றற்கு அளவு இல்லை. கல்விக் கூடத்தில் பயில்வது மட்டும் போதா தென்பதனைக் குறிப்பால் உணர்த்திப் பல நூல்களையும் பலகாலும் . சாகும்வரை - கற்க வேண்டும் என்று ஏழாம் பாடல் சிறப்பாகக் காட்டுகிறது. ‘மணற்கேணி'யைக் காட்டி ஆறாம் பாடல் அறிவின் வளர்ச்சியினைத் தெளிவுபடுத்துகிறது. வினைகள் போல உயிரின் கண்கிடந்து அது புகும்போது தானும் புகும் என்பதனை விளக்கவே, எட்டாம் பாடல் எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்று கூறி நின்றது. மற்றவை அழியும் தன்மையுடையன என்பதைப் பத்தாம் குறள் எடுத்துக் காட்டிற்று. * *