பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை


மேல் நாட்டு அறிஞர் டாக்டர் ஜி. யு. போப் அவர்கள் திருக்குறளையும், நா ல டி. யாரையும், தேவாரத்தையும் தமிழில் படிப்பதற்காக, தமிழ்மொழி பயின்றார்.

தாம் படித்ததோடு நில்லாமல் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து, உலகமெங்கும் திருக்குறள் பரவச்' செய் தார். ..

திருக்குறளை ' - அதனுள் பொதிந்து கிடக்கும் உலகளாவிய நல்ல நோக்கத்தை-பரப்பியதோடு நிற்கா மல், தன்னுடைய சமாதியின் மீது, “தாழ்மையான தமிழ் மாணவன்' என்றும் எழுத வேண்டுமென்று' ' ' சொல்லி, இன்றும் இல ண் ட ன் மாநகரில்-போப்பின் 'சமாதியில் பொலிவுற்று விளங்குகிறது தமிழின் பெருமை.

உலககோர் போற்றும் திருக்குறளை-ஐம்பது ஆண்டு 'காலமாக அய்யா திருக்குறளார் அவர்கள் மக்கள் மத்தியில் பரப்பிய பெருமையை நாடறியும்; நாட்டோர் அறிவர்.

  • திருக்குறளார்' என்று எல்லோராலும் பெருமை. "யோடு அழைக்கப்படும் அய்யா அவர்கள், திருக்குறளுக்குப் பல்: விளக்கவுரை கள், கட்டுரைகள், கதைகள் எழுதியிருந் தாலும், இப்போது 133 அதிகாரங்களுக்கும் விளக்கவுரை - பாக இந்நூலை எழுதியுள்ளார்கள். :

இந் நூலை , அவரது (26-9-88) 76-வது பிறந்த நாளில் வெளியிட்டுப் பெருமை கொள்கிறோம்.

திருக்குறளுக்கே பெருமைப்படுத்தி, திருக்குறள்: நெறீர் யோடு வாழும் அய்யா - அவர்களுக்கும், ', தமிழ்ப்பெரு மக்களுக்கும் எங்கள் நன்றி. .


அன்புடன், வானதி திருநாவுக்கரசு